மனிதன் எதற்கு உழைக்கின்றான்?
மனிதன் எதற்கு உழைக்கின்றான்? அவனுக்கு உணவும் உடையும் தங்க இடமுமே அவசிய தேவை, வேறு எல்லாம் இதற்கு அடுத்தால்தான்
கோவையில் ஒருவன் இதை தேடியிருக்கின்றான் , வயது குறைவு என்பதால் முதியோர் இல்லத்திலும் இடமில்லை, சாமியார் ஆவதும் சிரமம் என்பதால் அதையும் அவன் தேடவில்லை
இருமுறை விவாகரத்தானதில் மனிதன் கடும் சோகத்தில் உணவு தங்குமிடத்துக்கு பாதுகாப்பான இடம் எது என தவம்புரிந்ததில் ஞானம் விளங்கியிருக்கின்றது
உடனே அவன் தீவிரவாதியானான், அதாவது தான் ஒரு தீவிரவாதி எனவும் ஈரோட்டுக்கே குண்டு வைத்திருப்பதாகவும் காவல் நிலையத்துக்கு சொல்லிவிட்டு சாலையோரம் படுத்தும் கொண்டான்
அலறிஅடித்த காவல்துறை ஒருவழியாக அவன் கால் செய்த நம்பர் மூலம் அவனை அமுக்கிய பொழுது புன்னகை பூக்க “வாங்க வாங்க போவோம்.. ரைட்” என கிளம்பி சென்றிருக்கின்றான்
ஏற்கனவே ஐ.என்.ஏ எச்சரிக்கை, டிஜிபி காவலருக்கு ஓய்வே இல்லை என சொல்லியிருக்கும் நிலையில் இவனை விசாரிக்க வேண்டிய வகையில் விசாரித்திருகின்றது காவல்துறை
“அய்யயோ சாப்பிடவும் தங்கவும் ஜெயிலுக்கு போக ஆசை, வேற ஒண்ணுமில்லீங்க இதுக்காக கொலையா செய்யமுடியும்” என கதறியிருக்கின்றான்
இலவச உணவு, தங்குமிடம் சரி, இந்த இலவச மருத்துவம் வேண்டாமா? என சொல்லி இவனை பாத்ரூமில் வழுக்கி விழுந்தான் என காவல்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பாதவரை நல்லது