மன்னாதி மன்னன்
மன்னாதி மன்னன் படம் ஓடிக்கொண்டிருக்கின்றது, நடன பந்தயம் நடக்கின்றது. பத்மினி ஆடுகின்றார், ராமசந்திரன் குதிக்கின்றார்
பத்மினியின் நடனம் எவ்வளவு அழகு, எவ்வளவு நளினம்? எவ்வளவு அழகான முகபாவமும் அசைவுகளும்.
அருகே கழுத்து வெட்டபட்ட கோழிபோல ராமசந்திரன் குதிப்பதை காண சகிக்கவில்லை. பவர் ஸ்டாரெல்லாம் எவ்வளவோ பரவாயில்லை.
அந்த நடன இம்சையினை கூட பொறுக்கலாம், ஆனால் குடைராட்டினத்தில் சுற்றும் குழந்தை போல அந்த ராமசந்திரன் ஈஈஈஈஈஈ என இளித்துகொண்டே ஆடுவதைத்தான் சகிக்க முடியவில்லை
இந்த லட்சணத்தில் ராமசந்திரன் வெற்றிபெற்றதாக சபை சொல்கின்றது, தாங்கமுடியாத சினிமாத்தனம். ராமராஜன் சண்டைகாட்சிகள் இதனை விட எவ்வளவோ பெட்டர்.
எம்ஜிஆரை இதற்காகவே பத்மினி சுட்டிருக்க வேண்டும், நாட்டியத்தை இப்படி கேவலபடுத்தியவன் இருக்கவேண்டுமா என்ற கோபம் அவருக்குத்தான் இருந்திருக்க வேண்டும்
ஆனால் அஞ்சி சுடவில்லை
ஆனால் சிலபடங்களில் ராமசந்திரனோடு நடித்த எம்.ஆர் ராதாவிற்கு அந்த ஆத்திரம் வந்திருக்கின்றது, பொறுக்க முடியாமல் சுட்டே விட்டார்
அந்த வழக்கினை இந்த நோக்கத்தில்தான் விசாரித்திருக்க வேண்டும், தமிழகத்தில் எம்.ஆர் ராதாவிற்கு நிகழ்ந்த பெரும் அநீதி இது