மன்னார்குடி மலைவிழுங்கிகள்
சசிகலா சிறையில், கட்சி அதாளபாதளத்தில் கிடக்கின்றது, தினகரன் மீது பல வழக்குகள் நடக்கின்றன
இந்நிலையில் எங்களை என்ன செய்துவிடமுடியும் என தினகரன் சவால்விடுவது அவர்கள் மேல் யாருக்கும் அபிமானத்தை கொண்டுவராது
ஜெயாடிவி இப்பொழுதெல்லாம் ஏதோ சிரிய எல்லையில் நடக்கும் சண்டையினை அல் ஜசீரா ஓளிபரப்பு செய்வது போல் இந்த ரெய்டுகளை சொல்கின்றது
சில நேரம் அந்நாளைய ரேடியோக்கள் போல அமரகீதம் பாடுகின்றது
விரைவில் ஐநா சபையில் புகார் அளித்தாலும் அளிக்கலாம் போல
அம்மா சி.ஆ சரஸ்வதி நீர் வாசிப்பது இந்த ரைடுக்கு உங்கள் மேல் அனுதாபம் கொண்டவர்கள் பட்டியல் அல்ல
அது யாரெல்லாம் உங்களால் இரைபோட்டு வளர்த்துவிட பட்டார்கள் எனும் வேட்டை நாய்கள் பட்டியல்
அதை நீவிர் வாசிக்க வாசிக்க தமிழகம் பல உண்மைகளை புரிந்துகொண்டிருக்கின்றது
கொடநாடு தெரியும், அது என்ன கர்சன் எஸ்டேட்?
அது கொடநாடு அருகில் இருக்கும் சசிகலா எஸ்டேட்டாம். பெரியம்மா பெரியதாக வாங்கினால் சின்னம்மா அதன் அருகே சின்னதாக வாங்கியிருக்கும் போல
இன்னும் எத்தனை எஸ்டேட்டுகளை இப்படி விழுங்கியிருக்கின்றார்களோ தெரியவில்லை
கலைஞர் ஆக்டிவாக இருந்திருந்தால் அவரின் பேனா இப்படித்தான் சொல்லும்
“மன்னார்குடி மலைவிழுங்கிகள்”