மயக்கத்தில் கொடியது மங்கையர் மேலான மயக்கமே

தமிழகத்தில் 10 கொலை , தற்கொலை செய்திகள் வருகின்றதென்றால் 9 சாவுக்கான காரணம் இந்த‌ காதல், கள்ளக்காதல் என்பதாகவே இருக்கின்றது

சேலத்தில் ஒரு ஜோடி, மன்னார்குடியில் ஒரு பெண், மதுரையில் ஒரு கொலை என இன்றைய காதல் சாவு செய்தி மட்டும் மூன்று..

மயக்கத்தில் கொடியது மங்கையர் மேலான மயக்கமே என்றனர் ஞானிகள்

மாயையினை ஒழி என இதனைத்தான் சொன்னார்கள், காதல் எனப்படுவது ஒரு மண்ணாங்கட்டியுமில்லை ஒருவரிடம் ஏற்படும் அளவுக்கு மீறிய காரணமில்லா மயக்கம், ஒன்றுமே இல்லாத இடத்தில் ஏதோ இருப்பதாக கருதி ஏற்படும் வெற்று மயக்கம் என சொன்னார்கள் ஞானிகள்

படித்தனத்தாரும் பத்ருஹரியும் அவற்றை மாய்ந்து மாய்ந்து எழுதி வைத்தனர்

இனி எல்.கே.ஜியில் இருந்தே பட்டினத்தார் பாடல்களை படிக்க வைக்காமல் இம்மாதிரி சாவுகளை தடுக்க முடியாது போல..