மயில் பொங்கல்
பொங்கல், மாட்டுபொங்கல் விழா போல அக்காலத்தில் “மயில் பொங்கல்” ஒன்றும் இருந்திருக்கின்றது
மயில் வந்து நடமாடினால் வயல் வளம்பெறும் என தமிழன் நம்பியிருக்கின்றான், முருகபெருமானுக்கு மயில் வாகனமானது அப்படித்தானாம்
மயில் விவசாயத்துக்கு தோதான இடத்தில் அந்த சூழலில்தான் வாழுமாம், விவசாயத்துக்கு மகா அடிப்படையான மழைமேகத்தை கண்டால் ஆடுமாம், மயிலை வைத்தே தமிழன் மழை அறிந்தானாம்
இதனால் மயில்பொங்கல் என்றொரு பொங்கல் இருந்திருக்கின்றது, பின்னாளில் அது மறைந்தே விட்டது
இதோ சங்கம் “மயில் பொங்கல்” வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றது
(நம்மை போல் ஒருவன் எவனோ தலைவி தன் தாயுடன் இருக்கும் பழைய படத்தை டிவிட்டரில் தலைவிக்கு அனுப்பியிருக்கின்றான், அதை கண்ட தலைவி மகிழ்ந்திருக்கின்றார்
தலைவி மனம் குளிர செய்த அவனுக்கு ஆயிரம் பொற்காசுகள் அன்பளிப்பாக கொடுத்து, அவனை யானைமேல் ஏற்றி தமிழகத்தை வலம்வர செய்து வாழ்த்தும் பொறுப்பு சங்க செயலாளர் Periya Samy என்பவரிடம் ஒப்படைக்கபட்டிருக்கின்றது.
அவர் அவசரமாக யானை வாங்க கேரளா சென்றிருக்கின்றார், கேரளாவில் யானை இல்லா பட்சத்தில் தாய்லாந்து அல்லது கென்யாவுக்கு அவர் அனுப்பபடுவார்.)
அனைவருக்கும் “மயில் பொங்கல்” வாழ்த்துக்கள்..
