மறுக்க யாராலும் முடியாது
ஜல்லிகட்டு போராட்டம் பெரும் எழுச்சியாய் இருந்தபொழுது தமிழக மக்களுக்கு ஆதரவாக சட்ட திருத்தம் தந்ததும் இந்த அரசுதான்
தமிழக மக்களின் நியாயமான உணர்வுக்கு இந்த அரசு மதிப்பு கொடுத்தது
தமிழன் கலாமிற்கு மாபெரும் நினைவிடம் கட்ட முனைந்தது இந்த அரசு, திராவிட சிங்கங்கள் கலாமிற்காக துரும்பு கூட கிள்ளி போட்டதில்லை
குலசேகரன் பட்டினத்தில் கலாம் பெயரில் ராக்கெட் ஏவும் நிலையம் அமைக்கபடுமென அறிவித்தது இந்த அரசுதான்
பாகிஸ்தானால் பாதிக்கபட்ட தமிழக விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு நியாயம் கிடைத்ததும் இந்த ஆட்சியில்தான்
எய்ம்ஸ் மருத்துவமனை முதல் தேஜஸ் ரயில்வரை கொண்டு வந்ததும் இவர்களே
ரயில் போக்குவரத்திலும் பல நன்மைகள் இங்கு கிட்டியுள்ளன
இணையம் போன்ற மாபெரும் துறைமுகங்களை நிர்மானிக்க முயன்றதும் இவர்களே
தனுஷ்கோடியினை மறுபடியும் பொலிவானதாக்க முயன்றதும், பாம்பன் பாலத்தை சீரமைத்ததும் இந்த அரசுதான்
தனுஷ்கோடியினை மற்ற அரசுகள் தொட்டும் பார்க்கவில்லை
தாதுமணல் தொழில் எனும் பெயரில் அட்டகாசம் நடந்ததை எல்லாம் முறித்து போட்டது இந்த அரசுதான்
தென் தமிழக கடற்கரைக்கு தனி கவனம் எடுத்தது இந்த அரசுதான்
மீணவர்கள் சுடபடுவதை நிறுத்திகாட்டியதும் இந்த அரசுதான்
ஆழ கவனித்தால் ஒன்று புரியும், இப்பொழுதுதான் கிழக்கு கடற்கரையில் நடக்கும் கடத்தல்கள் தடுப்பு பற்றிய செய்திகள் அதிகம் வருகின்றன
கடத்த தயாரான கஞ்சா போன்ற பொருட்கள் எல்லாம் அகப்படுகின்றன, கடத்தல்கள் முடிவுக்கு வருகின்றன இலங்கை துப்பாக்கி சூடு இல்லை
என்.ஜி.ஓ என கணக்கில்லாமல் வந்த பணங்களை நிறுத்தி பல தேசவிரோத மற்றும் பிரிவினை வாதசக்திகளுக்கு கடிவாளம் போட்டது இந்த அரசுதான்
நீட் தேர்வு என்றாலும் மாணவ உலகம் ஸ்தம்பிக்கவில்லை, மருத்துவ கல்லூரிகள் தகுதிமிக்க மாணவர்களை சேர்க்கத்தான் செய்தது
இனி குறையவே செய்யாது என்றிருந்த நிலத்து விலை இந்த ஆட்சியில் குறைந்தது, நல்ல விஷயம் அது
நடக்குமோ இல்லையோ, கோதாவரி காவேரி இணைப்பு பற்றி கொஞ்சமாவது சொன்னவர்கள் அவர்கள்தான்
காவேரி சிக்கலுக்கு மாற்றுவழி உண்டு என சொன்னது இவர்கள்தான்
என்னமும் அரசியலுக்காக ஆயிரம் சொல்லட்டும், காமராஜரின் காலத்திற்கு பின் பல நல்ல மத்திய அரசு திட்டங்கள் இப்பொழுதுதான் இங்கு வர தொடங்கியிருக்கின்றன
அதை மறுக்க யாராலும் முடியாது, இப்படி ஒரு சில பக்கங்கள் அவர்களுக்கு இருக்கத்தான் செய்கின்றது