மறுபடியும் வாயால் சிக்கிகொண்டிருக்கின்றார் டிரம்ப்
மறுபடியும் வாயால் சிக்கிகொண்டிருக்கின்றார் டிரம்ப்
அதாகபட்டது தென்கொரியா அமெரிக்காவின் செல்லபிள்ளை அல்லது வளர்ப்பு மகன். ஜப்பான் அமெரிக்காவிற்கு இரண்டாம் உலகபோருக்கு பின் உறன்பிறவா சகோதரன்
இப்படியாக அவர்களுக்கு பால் வார்த்து , பணம் வார்த்து அவர்கள் அமுல்பேபி போல கொழுகொழுவென இருப்பதற்கு அமெரிக்கா பெரும் காரணம்
அமெரிக்க அதிபர்கள் எல்லாம் அடிக்கடி ஜப்பான், தென்கொரியா செல்வார்கள். அங்கிருந்து வடகொரிய எல்லைக்கு செல்வார்கள், சில நேரம் பைகுலர் வழியாக வடகொரியாவினை பார்ப்பார்கள்
புஷ், கிளிண்டன், ஒபாமா எல்லாம் அப்படி வடகொரிய எல்லைவரை தென்கொரிய பயணத்தின்பொழுது செல்வார்கள்
இந்நிலையில் ஜப்பான், தென்கொரியா நாடுகளுக்கு செல்லும் டிரம்ப் அந்த எல்லைக்கு செல்வேன் என அறிவித்தார்
இப்பொழுது வடகொரியா ரவுடியாகிவிட்ட நிலை, உலகில் யாரையும் அடிக்க ரெடி என ஒரு மாதிரி வம்பிழுத்துகொண்டு அதாவது தமிழிசை போல கெத்தாக திரியும் நேரம்
இப்பொழுது டிரம்ப் அங்கு சென்றால் எப்படி இருக்கும், போதா குறைக்கு டிரம்ப் பார்டருக்கு வந்தால் சுடுவேன் என பகிரங்கமாக மிரட்டுகின்றார் வடகொரிய அதிபர்
இதனால் பதற்றம் கூடிற்று, டிரம்பின் பாதுகாப்பு கருதியும் அந்த வெள்ளை சனியன் சுட்டாலும் சுடும் அதனால் போர் வெடிக்கும் என டிரம்பின் பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரிக்கை செய்து டிரம்பின் எல்லை பயணத்தை தடுத்துவிட்டனர்
வடகொரியா இது மாபெரும் சாதனை, டிரம்ப் எங்களை கண்டு பயந்துவிட்டார் என சொல்ல தொடங்கிற்று
ஆக வாயினை கொடுத்து அவமானத்தை தேடி பெற்றிருக்கின்றார் டிரம்ப்
எப்படியோ, அமெரிக்க கோபம் அதிகரித்துகொண்டே செல்கின்றது. எதில் முடியுமோ தெரியவில்லை
ஆனால் முடியும் பொழுது மிக மிக கடுமையாகவே முடியும் என்பது உறுதி.