மலபார் இந்து இனபடுகொலை
இந்திய சரித்திரத்திலே மிக கொடுமையானதும், தைமூரும் இன்னும் பலரும் செய்த மாபெரும் கொலைகளைவிட, அதாவது டெல்லியில் மனித தலையில் பிரமீடு கட்டி பெரும் பாதக கலவரம் செய்த தைமூரின் காலங்களை விட கொடியது அந்த மாப்பிள்ளைமார் கலவரம்
உண்மையில் அது கலவரம் அல்ல, திட்டமிட்ட இன அழிப்பு, அந்த கொடூரத்தில் செத்தவர்களெல்லாம் இந்துக்களாக இருக்குமளவு, இந்துக்களே இனி வாழகூடாது என முடிவெடுக்கபட்டு நிகழ்த்தபட்ட பெரும் இந்து இன அழிப்பு
கேரள மாகாணத்தில் 1921ல் நடந்த இந்து இன அழிப்பு அது, இதே நாளில்தான் நடந்தது, மறக்கமுடியா சோகம் அது
ஆனால் இதுவெல்லாம் வரலாறும் ஆகவில்லை அதுபற்றிய ஒரு சுவடு கூட வரலாற்றில் இல்லாபடி மறைக்கபட்டிருக்கின்றது
அதென்ன மாப்பிள்ளைமார் கலவரம்?
இந்த மாப்பிள்ள்ளைமார்கள் யாரென்றால் மலபாரில் வசித்த அரபு இந்திய கலப்பு சமூகம். அதாவது கேரளாவின் மேற்கு பகுதிகடற்கரைக்கும் அரேபியாவுக்குமான கப்பல் போக்குவரத்து பலநூறு காலத்துக்கு முந்தையது, அப்படி வந்த அராபியர்கள் உள்ளூர் மக்களுடன் சம்பந்தம் செய்தனர், மாப்பிள்ளைகள் என உரிமையாக அழைக்கபட்டனர்,
இந்த மாப்பிள்ளை மாமா உறவு இன்றும் பல இடங்களில் இந்துக்களுக்கும் இஸ்லாமியருக்கும் இருக்கும் அக்கால உறவின் தொடர்ச்சி என்பதில் சந்தேகமில்லை, பல இடங்களில் இதனை காணலாம்
இந்த மலபார் சிக்கல் தொடக்கத்தில் இருந்தே இருந்ததில்லை , 17ம் நூற்றாண்டில் திப்பு சுல்தானின் மலபார் படையெடுப்பு இந்துக்களுக்கு எதிரான பல கொடுமைகளை செய்தது, இந்துக்களின் நிலமும் சொத்தும் அபகரிக்கபட்டு கட்டாயமதமாற்றமும் இன்னும் என்னவெல்லாமோ எல்லாம் நடந்தது
திப்புவினை வீழ்த்திய வெள்ளையர்கள் அந்த திப்பு செய்த அட்டகாசத்தை தலைகீழாக செய்தனர், இந்து மக்களின் ஆதரவுக்காக மறுபடி நிலங்களை இந்துக்களிடம் ஒப்படைத்தல் இந்துக்களுக்கு உரிமையினை மீண்டும் வழங்குதல் என நிலையினை மாற்றினர், ஆனாலும் இரு இனங்களுக்கும் இடையேயான பகை அப்படியே இருக்கவேண்டும் என அவர்களுக்கு பெரும் விருப்பம்
17ம் நூற்றாண்டுக்கு பின் நிலமை அமைதியானாலும் கேரள மன்னர்களும் வெள்ளையனும் சேர்ந்து தங்களுக்கு அநீதி இழைத்ததாக மாப்பிள்ளைமார் தரப்பில் ஒரு அதிருப்தி நிலவியிருந்தது அல்லது அப்படி ஒரு பிம்பம் அமைக்கபட்டிருந்தது
இந்நிலையில்தான் கிலாபத் இயக்கம் வந்தது , இந்த கிலாபத் இயக்கம் என்றால் என்ன?
அன்று உலக இஸ்லாமியர்களின் பெருமையான அரசுகளாக விளங்கியவை இரண்டு ஒன்று மொகலாய சாம்ராஜ்யம் இன்னொன்று ஆட்டோமன் துருக்கிய சாம்ராஜ்யம்
இந்த இரண்டையும் நினைத்து நினைத்து உலக இஸ்லாமியர்கள் மகிழ்வார்கள், அன்று அரபு தேசங்களெலெல்லாம் இல்லை எண்ணெய் இல்லை அங்கே ஒட்டகமும் பேரிட்சைபழங்களும் நிலவழி வியாபாரம் மட்டுமே இருந்தன
இதனால் உஸ்கெக்கின் தைமூர், துருக்கியின் ஆட்டோமன், மொகலாயரின் ஷாஜகான் போன்றோர் மிகபெரிய இஸ்லாமிய அடையாளங்கள் அதில் தைமூருக்கு பின் உஸ்பெக் சாம்ராஜ்யம் அழிந்தாலும் மொகலாயமும் துருக்கியும் தனித்து நின்றன
இதில் மொகலாயர் அழிவினை வீர சிவாஜி தொடங்கி வைத்தான் அதை பிரிட்டிசார் வந்து முடித்து வைத்தனர், ஆனால் ஆட்டோமன் சாம்ராஜ்யம் நீடித்தது
அது நெப்போலியனே மோத அஞ்சிய சாம்ராஜ்யம் , சிலுவைபோர்களின் தொடர்ச்சியாக உருவான வலுவான இஸ்லாமிய சாம்ரஜ்யம்
அவர்கள் நிலவழியினை அடைத்தபின்புதான் கொலம்பஸ், வாஸ்கோடகாமா என பலர் கப்பல் ஏறி இந்தியாவுக்கு வழிதேடினர், ஆம் அவர்களை நிலத்தில் வெல்ல ஐரோப்பியரால் முடியவில்லை
சுமார் 500 வருடகாலம் இஸ்லாமிய சாம்ராஜ்யமாக இருந்த கோட்டை அது, அந்த கோட்டை முதலாம் உலகப்போர் முடிவில் உடைக்கபட்டு துருக்கி எனும் பெரிய தேசம் கலைக்கபட்டது
அது கலைவதை உலக இஸ்லாமியர் விரும்பவில்லை தங்கள் பெரும் நம்பிக்கை தகர்வதாக கதறினார்கள், அது இஸ்லாத்தின் தலமையகமாக அன்று இருந்தது
வாடிகன் மேல் கைவைத்தால் கிறிஸ்தவர்கள் எப்படி பொங்குவார்களோ அன்று இஸ்லாம் சமூகம் அப்படி பொங்கிற்று
கலீபாக்களின் தலைநாடு காக்கபட வேண்டும் என அலி சகோதரர்கள் என அழைக்கப்பட்ட முகமது அலி மற்றும் சௌகத் அலி ஆகியோர் 1919ம் ஆண்டு இந்தியாவில் கிலாபத் இயக்கத்தைத் தொடங்கினர்.
இதுதான் பாகிஸ்தான் எனும் தேசத்துக்கு முன்னோடி அமைப்பு
இந்த அமைப்பு துருக்கியினை காப்போம் என இங்கே போராட ஆரம்பித்தது, அது துருக்கியினை பிரிட்டிசார் உடைக்க கூடாது என நெருக்கடி கொடுக்க காந்தியினை அழைத்தது
இஸ்லாமிய சகோதரர்களின் கோரிக்கைக்கு குரல் கொடுக்கின்றேன் என காந்தியும் அந்த மாநாட்டில் கலந்து கொண்டார்
இதில் மிகபெரிய காமெடி என்னவென்றால் இதே காந்திதான் முதல் உலகபோரில் இந்திய வீரர்கள் கலந்து கொள்ள அழைப்புவிடுத்தார், அதில்தான் 1919ல் பிரிட்டிஷ் அரசு துருக்கியினை வீழ்த்தியது, பாலஸ்தீனத்தில் இருந்து நடந்த தென்முனை தாக்குதலில் இந்தியர்கள் கலந்து கொண்டனர்
ஆக இரு பக்கமும் ஆதரவு எனும் குழப்ப நிலையில் காந்தி இருந்தார்
கிலாபத் இயக்கம் முழுவதும் இஸ்லாமிய மனபான்மை கொண்ட இயக்கம் அது தேசத்தை விட மதமும் அந்த அபிமானமும் கொண்ட இயக்கம் எனபதால் காந்தியின் அமைதி பலத்த கண்டத்துகுள்ளானது
கிலாபத் இயக்கத்தின் மாநாட்டில்தான் இங்கே தனி இஸ்லாமிய நாடு இஸ்லாமியர்களுக்கு தனிதேசம் என்றெல்லாம் குரல்கள் வந்தன, காந்தி அதை கண்டிக்கவில்லை
இந்த மாநாட்டின் தொடர்ச்சிதான் இஸ்லாமியருக்கு இனி தேசமில்லை நாமே அமைக்கவேண்டும் என்றெல்லாம் ஆங்காங்கே கலவர காட்சிகள் தொடங்கின, இது மலபாரில் புகைந்திருந்த கணலில் பெட்ரோல் ஊற்றியது போல் பெரிதாக எரிந்தது
இந்துக்களிடம் இருந்து அதிகாரத்தை கைபற்றி தனிநாடு அமைப்போம் என பெரும் கூட்டம் கிளம்பி வரலாறு காணா கொலைகள் நடந்தன, பலமாதம் அந்த கலவரம் நீடித்தது
அதில் எவ்வளவு ஆயிரம் கற்பழிப்பு நடந்தது, எவ்வளவு கொலை நடந்தது என இன்றுவரை முழு தகவல் இல்லை எனினும் வெள்ளையன் கடைசியில் அறிவித்ததுமட்டும் சுமார் 15 ஆயிரம் முதல் 20000 பேர் இறந்திருக்கலாம் என்பது
கலவரத்தை அடக்கும் காட்சிகள் மெதுவாகத்தான் நடந்தன, முதலில் ஏதோ மோதல் என அமைதியாக இருந்த சென்னை மாகாண ஆளுநர் விலிங்க்டன் மெல்ல நிலமையின் வீரியத்தை அறிய மாதகணக்கு ஆனது
காந்தி இந்த கலவரத்தை வெகு எளிதாக கடந்து சென்றார், சில இந்துக்களே நில தகறாறில் கொல்லபட்டார்கள் இதை பெரிதாக்க கூடாது என மனசாட்சியினை கொன்றுவிட்டு பேசிகொண்டிருந்தார்
அந்த காலங்கள் எவ்வளவு கொடூரமாக இருந்ததென்றால் காணும் கிணறேல்லாம் இந்து பெண்களின் துண்டான உடலால் நிரப்பபட்டு அவை அப்படியே மூடபடும் அளவு கொடிய காட்சிகளாய் இருந்தது என்கின்றது வரலாறு
பல்லாயிரம் இந்துக்கள் கொல்லபட்ட இந்த “இனபடுகொலை” குற்றவாளிகள் என 10 பேரை தூக்கு தண்டனை விதித்தது பிரிட்டிஷ் அரசு, இவர்கள் கிலாபத் இயக்க ஆட்களாய் இருந்தார்கள்
பிரிட்டிஷ் ராணுவம் காட்சிக்குள் வந்து கலவரத்தை அடக்கியபின்பே பெரும் சோக காட்சிகள் உலகுக்கு தெரிந்தன
ஹிட்லரிடம் யூத இனம் பட்ட அத்தனை கொடுமைகளும் அங்கே அரங்கேறியிருந்தன, ஒருவகையில் ஹிட்லர் நல்லவன் விஷவாயு செலுத்தி யூதரை அழுகையும் கண்ணீருமின்றி கொன்றான்
இங்கோ காட்டில் எலிகளை அழிப்பது போல் இரக்கமின்றி இந்துக்களை கொன்றிருந்தார்கள்
உண்மையில் மிக கொடுமையான வரலாறு இது
எங்கோ துருக்கியில் ஒரு சாம்ராஜ்யம் உடைய கூடாது என்றும், அப்படி உடைந்தால் இந்தியாவினை உடைப்போம் என்று சொந்த மக்களை கொன்று குவித்ததெல்லாம் மன்னிக்கமுடியா குற்றம்
இதனை நிலவுடமை போர் என கம்யூனிஸ்டுகளும், தேசவிடுதலைபோர் மாப்ளாக்கள் செய்தது பிரிட்டிசாருக்கான எதிர்ப்பு போர் என சொல்வோரும் உண்டு, ஆனால் பிரிட்டிஷ் ஆட்சியாளர் சாகவில்லை
கலவரத்தை அடக்க சென்ற காவலர் தவிர வேறுயாரும் சாகவில்லை செத்ததெல்லாம் இந்துக்கள்
இந்து பெண்களையும் குழந்தைகளையும் மிக கொடூரமாக கொன்றுவிட்டு அதை சுதந்திரபோர் என சொல்லும் அளவு கொடுமை வரலாற்றில் நடந்தது
1921 மற்றும் 1922ல் மலபார் எரிந்து எத்தனை ஆயிரம் இந்துக்க்களோ செத்த நிலையில் ஆம் பிரிட்டிசாரின் மறைக்கபட்ட குறைவான கணக்கே 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் என்றால் உண்மை நிலவரம் என்ன என்பதை ஊகித்து கொள்ளலாம் அந்நிலையிலும் காந்தியோ நேருவோ மலபார் பக்கம் செல்லவே இல்லை
தமிழக புரட்சியாளன் 1924ல் வைக்கம் கோவிலில் சாதி சிக்கல் என ஓடிய ராம்சாமி அவர்களும், இந்துக்கள் கொத்து கொத்தாக கொல்லபட்டபொழுதும் அதன் பின்னும் அந்த இடத்துபக்கமே செல்லவில்லை
சரி, அதன் பின்னும் இந்த 100 ஆண்டுகளில் இந்திய தலைவர்கள் யாராவது சென்றார்களா , துருக்கி பிளப்புக்காக இங்கு செத்த அப்பாவி இந்துக்களுக்கு அஞ்சலி செலுத்தினார்களா என்றால் இல்லை
அவர்களுக்கு மலபார் பக்கம் ஒரு நினைவிடம் உண்டா என்றால் அதுவுமில்லை
இந்தியாவின் கலவரங்களில் மிக கடுமையானதும் நினைத்தாலே குலைநடுங்குவதுமானது அந்த மலபார் கலவரம்
எம்மால் சுருக்கமாக இவ்வளவுதான் சொல்லமுடியும், அங்கு கலவரம் முடிந்த கொடுமைகளுக்கு பின்னும் உயிர்தப்பிய பெண்களுக்கெல்லாம் கருகலைப்பு கட்டாயம் எனும் அளவு நிலமை இருந்ததென்றால் அதற்கு மேலும் சொல்ல ஒன்றுமில்லை
இந்திய தேசத்தின் மறைக்கபட்ட ரத்த வரலாறு இது, 1921க்கு பின்னரான காந்தியின் சுதந்திர நாடக காட்சிகளில் இந்த கோரம் மறைக்கபட்டது பின் கேரளாவினை காங்கிரசும் கம்யூனிஸ்டுகளும் மாறி மாறி ஆண்டதில் அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை எனும் அளவு காலத்தின் மேல் சுண்ணாம்பு அடிக்கபட்டது
காஷ்மீர்பைல்ஸ் படத்தை தொடர்ந்து மலபார் கொடுமையும் படமாக வரும் என்ற அறிவிப்பு வந்ததாக சில தகவல்கள் தெரிவிகின்றன, வந்தால் எல்லோருக்கும் அதன் வீரியம் தெரியும்
இதெல்லாம் ஆட்சியில் இல்லா மதமும் அதன் மக்களும் எதிர்கொள்ளும் சவால்கள், ஆட்சியில் இல்லா மதம் நிலைக்காது அதன் மக்களுக்கு காவலும் சட்டமும் இருக்காது அவர்கள் வேலியற்ற பயிர்கள், காவலில்லா ஆடுகள் என்பதை காட்டிய ரத்த வரலாறு
மலபார் கலவரத்தை போல கொடியது சிவாஜி காலத்துக்கு முன் அதாவது 16ம் நூற்றாண்டில் கோவாவில் போர்த்துகீசிய மிஷனரிகள் நடத்திய “புனித விசாரணை” எனும் ரத்தவெறி ஆட்டம்
எங்கிருந்தோ வந்த அக்கோஷ்டிகள் தங்களுக்கு ஆதரவாக இருக்க இங்கு பலரை மதம் மாற்றி, அதை தக்கவைக்க நிகழ்த்திய மிகபெரும் வெறியாட்டம்
அதை அன்றைய மொகலாய அரசோ, பிஜப்பூர் சுல்தானோ கண்டிக்கவே இல்லை அதன் பின்னும் போர்ச்சுகீசியரின் மிரட்டல் இருக்கத்தான் செய்தது, சிவாஜிதான் கப்பல்படை கட்டி அவர்களை அடக்கி வைத்தான்
அந்த “கோவாவின் புனித விசாரணை” என்பதுதான் ஒரு காலத்தில் லத்தீன் அமெரிக்காவில் ஸ்பானியர்களும் போர்த்துகீசியர்களும் அந்த மக்களுக்கு செய்த கொடூரத்தை இந்திய இந்துமக்களுக்கும் செய்த கொடும் காட்சிகள்
ரத்ததில் மரித்த இயேசுவின் பெயரில் இந்துக்களை ரத்தத்தில் குளிக்கவைத்து கொன்று பரிசுத்த ஆவியின் தண்டனை என நெருப்பில் எரித்து போட்ட கொடூரங்கள்
இங்கு மலபார் கலவரம் கூட படமாக வரும், ஆனால் கோவாவின் கலவரங்கள் நிச்சயம் படமாக வராது, வருவதற்கு இங்கிருக்கும் மாய சக்திகள் விடாது
இப்பொழுதும் அந்த மாப்பிள்ளைமார் கலவர காட்சிகள் மறுபடியும் நடக்க வாய்ப்பு இருந்தது, வெளிநாட்டு நிதிகளுடனும் பெரும் ஆயுதங்களுடனும் கேரளாவினை மறுபடியும் அதாவது 100 ஆண்டுகள் கழித்தும் குதறிபோடும் ஆபத்து வந்தது
ஆனால் இப்பொழுது இந்தியாவில் இந்தியர்களுக்காக ஆளும் மோடி அரசு இருப்பதால் இரு தினங்களுக்கு முன் அந்த சதிமுறியடிகபட்டது
கேரளாவில் எக்காலமும் கூடுதல் கவனமும் காவலும் தேவை, இன்னொரு மாப்பிள்ளைமார் கலவரத்தை நாடு தாங்காது என்பதால் மிக மிக விழிப்பாக கேரள மாகாண மதவெறியர்களை மாப்பிள்ளைகளின் வாரிசாக வந்து 100 ஆண்டு கழிந்தும் கொலைவெறியுடன் தேச எதிர்ப்புடன் அலையும் கும்பலை முழுக்க களைந்து எக்காலமும் அமைதி நிலவ அங்கு வழிவகை செய்யபட வேண்டும்
இது தெரியாத நடுநிலை நக்கியாக இருந்துவிட்டேன்.நல்லவேளை 40வயதிலாவது முகநூல் மூலம் இந்து உணர்வு வந்தது.நன்றி திருஸ்டான்லிராஜன்.