மலேசிய மக்களுக்கு சுதந்திரதின வாழ்த்துக்கள்

Image may contain: sky and cloud

பல வருடங்களாக எமக்கு சோறு மட்டுமல்ல, சிக்கன் மட்டன், இறா, சுறா என எல்லாவற்றையும் போட்டுகொண்டிருக்கும் நாடு மலேசியா

அருமையான நாடு, பிரச்சினைகள் எல்லா நாட்டிலும் இருக்கும், பிரச்சினை குறைவான நாடு எது என்பதில்தான் விஷயம் இருக்கின்றது, நிச்சயம் மலேசியா அதில் அற்புதமான நாடு

குறை சொல்பவன் சொல்லிகொண்டே இருப்பான். நானும் கவனிக்கின்றேன், ஏழை பணக்காரன் இடைவெளி மிக குறைவாக இருக்கின்றது

முதலாளி பென்ஸ்காரில் சென்றால் டிரைவர் டொயோட்டா காரில் செல்ல முடிகின்றது

மத துவேஷம் இல்லை, மக்கள் அவரவர் வழிபாடுகளை சிறப்பாக செய்ய முடிகின்றது

உழைப்பவன் நிச்சயம் பிழைக்க முடிகின்றது, வாய்ப்புகள் பெருகி கிடக்கின்றன‌

இந்நாட்டின் உப்பு முதல் துரியன் பழம் வரை உண்டவன் எனும் வகையில் நிச்சயம் அந்நாட்டுக்கு நான் நன்றிகுரியவன்

இந்த இனியநாட்டு மக்களுக்கு சுதந்திரதின வாழ்த்துக்கள்