மாட்டு சாண கேக்

“எதை செய்தாலும் அதை அழகுணர்ச்சியோடு செய், தயாரிக்கும் பொருள் என்னவாகவும் இருக்கட்டும் ஆனால் அதை கவர்ச்சிகரமாகவும் அழகாகவும் சந்தைபடுத்து ..” என்பதுதான் அமெரிக்க தொழில் தத்துவம்

வெறும் தகர எந்திரத்தை அழகு கார்களாக அவர்கள் மாற்றுவதும், இன்னும் எல்லாவற்றிலும் ஒரு அழகினை கூட்டுவதும் அவர்கள் வியாபார தந்திரம்

அமெரிக்காவில் இந்துக்கள் அதிகரித்துவிட்டதை தொடர்ந்து மாட்டு சாண வறட்டியினையும் விற்க தொடங்கிவிட்டார்கள் “மாட்டு சாண கேக்” என அதற்கு பெயர்

வாக்குக்காக திமுக பழனிமலைக்கு காவடி எடுப்பது போன்றது அமெரிக்க வியாபார கணக்கு அந்த அளவுக்கு இறங்கிவருவார்கள்

இனி என்னாகும்?

அங்கிள் சைமன் கம்பீரமாக சொல்வார் “அமெரிக்காவில் மாட்டு சாண வறட்டி பத்து எண்ணிக்கை 300 ரூபாய்.. என் உறவுகளே, நான் ஆட்சிக்கு வந்தால் மாட்டு சாணத்திலே தமிழ்நாட்டை ஜெர்மன் போல் ஆக்குவேன்”

உடனே தும்பிகளும் “சாணி வீரன்” சீமான் வாழ்க, “சாணி தமிழன்” சீமான் வாழ்க‌ என கத்தி விசிலடித்து கைதட்டி கொள்ளும்