மாணவிகள் பீர் குடித்த செய்தி

மாணவிகள் பீர் குடித்த செய்தி பரவுகின்றது, இதெல்லாம் எல்லா நாடுகளிலும் சாதாரண விஷயம்

குடிக்காதே என இந்து மதமும் சொன்னதில்லை, யூத கிறிஸ்தவ மதமும் சொன்னதில்லை கீழ்திசை நாடுகளின் தத்துவமும் சொல்லவில்லை

கிறிஸ்தவ வழிபாட்டிலும் கொண்டாட்டத்திலும் ஒயினுக்கு தனி இடமே உண்டு

சாராயமும் கள்ளும் படைக்கபடா படையல் கிராம தெய்வ வழிபாட்டில் இல்லவே இல்லை

ஒவ்வொரு இனமும் ஒரு பானத்தை தேடியிருக்கின்றது, இங்கு பனையில் தேடியிருக்கின்றார்கள் , அரேபியாவில் திராட்சை பழத்தில் தேடியிருக்கின்றார்கள், ரஷ்யர்கள் உருளை கிழங்கில் தேடியிருக்கின்றார்கள், சிலர் பார்லியில் தேடியிருக்கின்றார்கள்

ஒரு வழியாக தேடி சரண்டைந்திருக்கின்றார்கள், அட சுண்ட கஞ்சியில் கூட அதை கண்டிருக்கின்றது சமூகம்

அது உடல் உழைப்போ இல்லை மூளை உழைப்போ களைத்துவிட்ட உடலுக்கும் மனதிற்கும் ஒரு நிவாரணியாக அது இருந்திருக்கின்றது

அளவோடு குடி என்கின்றது பைபிள், குடி என்பது நிம்மதியாக தூங்க என்பது மட்டுமே என்கின்றது யூத மொழி

தமிழ்பெண்கள் பீர் குடித்துவிட்டார்களா என்றால், அவ்வையாரே கள் குடித்த கதை இலக்கியத்தில் இருக்கின்றது

அதுவும் ஆமைகறியோடு சேர்ந்த கள்ளாம்

இந்த மதுவும், மாதரார் சமாச்சாரங்களும் நிச்சயம் மதங்கள் சொல்லும் பாவங்கள் அல்ல‌

அவை எல்லாம் தனக்கு தானே ஒருவன் தேடிகொள்ளும் ரோகங்கள், தீமைகள்

இவற்றை எல்லாம் சட்டம் போட்டோ இல்லை வேறு விதத்திலோ தடுக்கவே முடியாது

தனக்கு இது தீது என ஒருவன் நினைத்தாலன்றி இதிலிருந்து ஒரு சமூகம் பாதுகாப்பு தேடமுடியாது

அரசாங்கம் மதுகடைகளை திறந்து வைக்கின்றது, அதற்கான இலவச விளம்பரங்களை சினிமா செய்கின்றது

இளம்பெண்களின் கனவு நாயகர்களான அஜித், மாதவன், விஜய் சேதுபதி வரை பாட்டிலும் கையுமாகவே அலைகின்றனர்

பின் அவர்களை ரசிக்கும் இளம்பெண் கூட்டம் என்னாகும்?

தான் விரும்பி ரசிக்கும் ஒரு பிரபலத்தை கொண்டாடும் கூட்டம் அவன் செய்வதை எல்லாம் செய்து பார்க்க முயற்சிக்கும்

இந்த ஓவியா போன்ற நடிகைகள் கூட குடிகார வேடத்தில் வாழ்கின்றார்கள், இந்த சூழல் அப்படி ஆகிவிட்டது, ஆக்கிவிட்டார்கள்

நான் சொன்னதை செய்யுங்கள், நான் செய்வதை செய்யாதீர்கள் என அந்த பிரபலங்களும் சொல்லபோவதில்லை, அவர்களின் நிலை அப்படி

இவை நிச்சயம் பெரும் பாவங்கள் அல்ல, ஆனால் தனக்கு தானே அவர்கள் வருவிக்கும் தீமைகள்

அது களவும் கற்று மற என சொல்லும் பருவம்தான், ஆனால் கற்றுவிட்டால் விடமுடியாத பழக்கங்களிடம் செல்லாமல் இருப்பது அவர்களுக்கு நல்லது

ஆண்களின் உடல் பலம் வாய்ந்தது, அவர்கள் குடித்து ஆடி அடங்க 60 , 70 வயது ஆகலாம், 50வாது கடக்கலாம்

பெண்கள் உடல் பலவீனமானது, அது நிச்சயம் தாங்காது, குடிக்கும் இளம்பெண்கள் பலருக்கு குழந்தை வரம் இல்லை என்பது மேட்டுகுடி குடிகார பெண்களை ஆய்வு செய்து வந்த சர்வே

குடியால் விளையும் தீமைகளை இந்து மதம் சொல்லும் அளவு இன்னொரு மதம் சொன்னதில்லை

வள்ளுவன் தனி குறளே வகுத்தான், “நெருப்பினை நெய்யால் அணைத்தேன்” என குடியின் கொடுமையினை சுக்ரிவன் புலம்பலாக சொல்கின்றான் கம்பன்

இன்னும் ஏராளம் உண்டு

வாழ்க்கைக்கான தத்துவமும் கல்வியும் இந்துமதத்திலும் தமிழ் இலக்கியங்களிலும் ஏராளம் உண்டு, அவற்றை மீட்டெடுத்தாலே அடுத்த தலைமுறையினை மாற்றிவிடலாம்