மாபெரும் குடிநீர் தட்டுபாடு
மாபெரும் குடிநீர் தட்டுபாட்டை ஏதோ உட்கட்சி விவகாரம் போல கடந்து செல்ல நினைக்கின்றது அதிமுக அரசு
அமைச்சர்கள் மற்றும் முதல்வரின் பேச்சுக்கள் அப்படித்தான் தெரிகின்றன
இது கடந்து செல்லும் விஷயமென அவர்கள் நினைத்தால் அவர்கள் அறியாமையினை நினைத்து கோபமே மிஞ்சும்
பூசனிக்காயினை சோற்றில் மறைக்க முடியுமா? ஊர்வாயினை மூட முடியுமா ? என்பார்கள்
அப்படி இதெல்லாம் மறைக்க கூடிய விஷயம் அல்ல, ஊருக்கு உண்மை தெரியாதா என்ன?
ஆளும் கட்சி அப்படித்தான் மறைக்கும், ஆனால் எதிர்கட்சிகளின் பணி அந்த முகதிரையினை கிழிப்பது
அவர்கள் ஏன் அமைதி என்பதுதான் புரியவில்லை
திமுக என்றல்ல, எல்லா கட்சியுமே அதில் கனத்த அமைதி
ஆக கட்சிகள் இடையே கனத்த ஒற்றுமையும் கள்ள மவுனமும் இருக்கின்றது
மக்கள்தான் பாவம், உண்மையில் அவர்களுக்காக எந்த கட்சியுமே இல்லை…