மாபெரும் கொடைவிழா “உலக மாதா” குஷ்புவிற்கு
இது ஆடி மாதமாம்
திரும்பும் இடமெல்லாம் அம்மனுக்கு கொடை விழா, சுடலை மாட சாமிக்கு விழா இன்னும் தென்னக மாதா கோவில்கள் உட்பட ஏகபட்ட தெய்வங்களுக்கு விழா
அவைகளுக்கென்ன சாதாரண தெய்வங்கள், எளிதாக விழா நடத்திவிடலாம்
ஆனால் எங்கள் “உலக மாதா” குஷ்பு தேவதைக்கு திருவிழா நடத்துவது என்பது சாதாரணமா?
நிலாவுக்கே சென்று பொங்கல் வைப்பது வரை ஏராளமான சம்பிரதாயங்கள் உண்டு.
அதற்கு பல பில்லியன் டாலர்கள் தேவைபடும் பிரமாண்ட நிதி வேண்டும்
இதனால் பில்கேட்ஸ், வாரன் பெப்பட், அரபு சுல்தான்கள், உலக வங்கி, ஜப்பானிய தென்கொரிய தொழிலதிபர்கள் என பலருக்கு சங்கம் கடிதம் எழுதியுள்ளது
உலகெங்கு இருந்து மாபெரும் நிதி திரட்டபட்டு இந்த ஆடி முடிவதற்குள் மாபெரும் கொடைவிழா “உலக மாதா” குஷ்புவிற்கு நடத்தபடும்