மார்ச் 16ம் தேதிக்கு முன்பே எல்லைகளை மூடியிருக்க வேண்டும்-ஸ்டாலின்
மார்ச் 16ம் தேதிக்கு முன்பே எல்லைகளை மூடியிருக்க வேண்டும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும், ஜனவரியிலே மூடியிருக்க வேண்டும் : மு.க ஸ்டாலின்
இதே ஸ்டாலின் ஜனவரி பிப்ரவரியில் என்ன செய்தார் என்றால், ஜனவரி பிப்ரவரி மார்ச் பாதிவரை அன்னார் இந்த குடியுரிமை போராட்டத்தில் முழு ஆளாக நின்றார்
எங்கெல்லாம் கும்பல் கூடுமோ அங்கெல்லாம் கனிமொழியும், உதயநிதியும் நின்றார்கள். ஸ்டாலின் வண்ணார்பேட்டை முதல் எல்லா இஸ்லாமிய பெரும் கூட்டத்திலும் முன்னால் இருந்தார்
அப்பொழுதெல்லாம் கொரோனா நினைவு இல்லையா?
ஏன் பிப்ரவரியில் தமிழில் தஞ்சையில் குடமுழுக்கு என ஒப்பாரி வைத்தது ஏன்? கூட்டம் வேண்டாம் என சொன்னாரா? இல்லையே ஏன்?
ஆக இவர் எது செய்தாலும் சரி, காலத்துக்கு ஏற்ப அரசு முடிவெடுத்தால் தவறா?
சரி அன்னார் என்ன சொல்ல வேண்டும்?
எனக்குத்தான் அறிவு இல்லை, உலகம் தெரியவில்லை, சூழல் புரியவில்லை. தமிழ்நாட்டு அரசுக்குமா புரியவில்லை என கேட்டால் அது நியாயம், அது சத்தியம், அது உண்மை