மாற்றம் பெறாதவை எல்லாம் அழிந்தன‌

Image may contain: 4 peopleஇந்த உலகில் மாற்றம்பெறா கொள்கை என எதுவுமில்லை, ஒரு காலத்தில் இதுதான் தத்துவம், இதுதான் கொள்கை என ஆணிதரமாக சொன்னவை எல்லாம் மாற்றம் பெற்றன‌

மாற்றம் பெறாதவை எல்லாம் அழிந்தன‌

புத்தமும் சமணமும் ஒரு காலத்தில் கொண்டாடபட்டு பின் இந்தியாவில் இருந்து ஒழிந்தன, காரணம் அவை கால மாற்றம் பெறவில்லை, அனுசரிக்க மிக சிரமான அந்த மதம் இங்கு அகன்றது

அதனை தன் போக்கிற்கு மாற்றம் செய்த சீனா, ஜப்பான் நாடுகளில் அது வாழ்கின்றது, பாம்புக்கறியோடு புத்தம் சரணம் என தயக்கமின்றி சொல்கின்றார்கள்

கார்ல் மார்க்ஸின் புத்தகம் அப்படியே லெனினால் நடைமுறைபடுத்தபடவில்லை, அதில் சர்ச்சைகுரிய சமூக அமைப்பு இருந்தது. அதனை அகற்றிவிட்டுத்தான் லெனின் அதனை நடைமுறைக்கு கொண்டுவந்தார்

மாவோ இன்னும் மாற்றினார், டெங் சியோ பிங் அதனையும் மாற்றினார் சீனா வாழ்கின்றது

யூதமதம் இன்று தன்னை எவ்வளவோ மாற்றிகொண்டுதான் இன்றைய உலகில் நிற்க முடிகின்றது, கத்தோலிக்க கிறிஸ்தவமும் சில மாறுதல்களை செய்யவில்லையென்றால் இன்று ஒழிந்திருக்கும்

Image may contain: 1 person, suit and indoorவிஞ்ஞானம் சொல்வது என்ன?

கலிலியோவின் சில பிழைகளை களைய முற்பட்டுத்தான் நியூட்டன விஞ்ஞானியானார், நியூட்டனின் சில கருத்துக்களில் முரண்பட்ட ஐன்ஸ்டீன் பெரும் விஞ்ஞானி ஆனார்

நியூட்டனை அப்படியே ஏற்றிருந்தால் ஐன்ஸ்டீன் உருவாகியிருக்கமாட்டார்

இதெல்லாம் ஏன் நினைத்துபார்க்க வேண்டும் என்றால், இந்த பெரியார் பெயரை சொல்லி இந்த நாட்டில் ஒரு பண்டிகையும் கொண்டாட விடமாட்டோம் என அழிசாட்டியம் செய்யும் அவர்களுக்கும் சில திமுக காரர்களுக்களுக்காகவும்

பெரியார் என்பவர் இந்நாட்டில் தமிழகம் இணைந்திருக்கும் அளவும் பல காரணங்களுக்கு தேவைபடுவார், முதலாளித்துவம் இருக்குமளவும் கார்ல் மார்க்ஸ் தேவைபடுவது போல அவர் இருப்பார்

ஆனால் இந்த மாதிரி கோவில், பார்ப்பானியம், பன்றிக்கு பூனூல் போடுதல், தீபாவளி அன்று நரகாசுரன் விழா என இடையூறு செய்தல் இம்மாதிரி அழிச்சாட்டியங்கள் செய்தால் அது பெரும் பின்னடைவினையே கொண்டுவரும்

கடவுள் நம்பிக்கை என்பது மக்களின் மனதில் என்றும் வாழும் விஷயம், ரஷ்ய கம்யூனிசம் உச்சத்தில் இருந்த காலங்களில் அது ஒரு பேஷனாக இருந்திருக்கலாம், அவர்களே கதிர் அரிவாளை தூரவிசிவிட்டு சிலுவை வைத்தபின் அந்த நடைமுறை வழக்கொழிந்தது

உலகமெல்லாம் அந்த பழைய இறுக்கமில்லை. சில கம்யூனிச சாயல் நாடுகளும் கடவுள் நம்பிக்கையினை தடுப்பதில்லை

திமுக இதில் பல அனுபவங்களை கண்டது, திராவிட நாடு எனும் குரலுக்கு ஆதரவே இல்லை என்றபின்புதான் அது மாநில சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்ற கோஷத்திற்கு மெதுவாக மாறி பின் ஆட்சிக்கும் வந்தது

பின் ஈழவிஷயத்தில் இந்திய எதிர்ப்பு அரசியல் செய்து மாட்டி, பின் திருந்தி 2009ல் அந்த கறையினை துடைத்து இன்றளவும் எதிர்கட்சியாய் நிற்கின்றது

ஆம் தமிழக மக்கள் பிரிவினை விரும்புவர் அல்ல, அப்படி பேசினால் ஒரு வோட்டு பெறமுடியாது என்பது கலைஞருக்கு நன்றாய் விளங்கிற்று. அவர் திமுகவினை அப்படித்தான் நடத்தினார்

மத துவேஷங்களை பேசிவிட்டு இங்கு ஒரு வோட்டும் வாங்கமுடியாது என்பது அண்ணா காலத்திலே தெரிந்துதான் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என அவர் பல்லவியினை மாற்றினார்

இது கலைஞருக்கு நன்றாய் தெரிந்ததால்தான் பெரும்பாலும் அவர் மத நம்பிக்கைகளை தடுப்பதில்லை, நியாயமான விஷயங்களை அவர் தடுத்ததில்லை ஆனால் மூட நம்பிக்கைகளை சாடினார்

இந்த உண்மை தெரிந்த திமுகவினர் எவனும் தீபாவளிக்கு குறுக்கே புகுந்து அழிச்சாட்டியம் செய்ய மாட்டான்

காலத்திற்கு ஏற்ப மாறாத எதுவும் நிலைக்காது என்பதே இவ்வுலகம் சொல்லும் பாடம், அது இவர்களுக்கும் பொருந்தும்

ஆனால் நாங்கள் மாறமாட்டோம் அல்லது மாறும் அளவிற்கு மூளையில்லை என சொல்பவனே அழிச்சாட்டியம் செய்து அந்த கொள்கைகளை அழிக்கும் வேலையில் செய்து கொண்டிருக்கின்றான்

அப்படி இந்த திக, (சில‌ திமுகவினரும்) சில கொள்கை மாற்றங்களை செய்தால் அவ்வியக்கம் தொடர்ந்து வரும், இல்லாவிட்டால் அழியும்