மாற்று நாட்டினரிடம் பேசுவது சுவாரஸ்யமான விஷயம்
நேற்று ஒரு பாகிஸ்தான் பெண்மணியினை ரயிலில் சந்தித்தேன், அவர் லாகூரை பூர்வீகமாக கொண்டவர்.
எப்பொழுதுமே மாற்று நாட்டினரிடம் பேசுவது சுவாரஸ்யமான விஷயம், அதுவும் பாகிஸ்தானியர் என்றால் தனி உற்சாகம் வந்துவிடும்
அம்மணி கிறிஸ்தவர், பாகிஸ்தானின் 3% கிறிஸ்தவரில் ஒருவர். அங்கு இயேசுசபை குருக்களின் நிறுவணம் ஒன்றை இலங்கை ஊடாக நடத்தியிருக்கின்றார், வழக்கமான கிறிஸ்தவ கட்டுப்பாடான ஹிஜாப் அணியாதே, பர்தா போடாதே என சிலவற்றை அங்கும் சொல்லியிருக்கும் போல
அது என்ன இந்தியாவா, செக்குலரிசம் மதசார்பற்ற நாடு என சொல்லிகொள்ள?
அம்மணியினை துப்பாக்கி காட்டி மிரட்டியிருக்கின்றார்கள் அம்மணியின் கோஷ்டியே ஐ.நா அகதிகள் முகாமில் அடைக்கலாகி இங்கே வந்துவிட்டது
இங்கு என்ன செய்கின்றீர்கள் என கேட்டோம் , அகதி நிலை என்பதால் வேலை செய்யமுடியாது என்றார்
(ஆம், இந்திய திருநாட்டை தவிர எங்கும் அகதிகள் வேலை செய்யமுடியாது, ஐ.நா வழங்கும் உதவி தொகையோடு முடங்க வேண்டும், மீறி வேலை செய்தால் சம்பந்தபட்ட நாடு பிடித்து உள்ளே போடும் அதில் ஐ.நா தலையிடாது
அடுத்தநாட்டுக்காரன் தன் நாட்டுக்காரன் வேலையினை பறித்துவிட கூடாது என்பதற்கான ஏற்பாடு இது)
பின் எப்படி வாழ்வு ஓடுகின்றது என கேட்டோம், இப்பொழுது சர்ச் எங்களை கவனித்துகொள்கின்றது விரைவில் ஆஸ்திரேலியா அல்லது நியூசிலாந்து சென்றுவிடுவோம் எல்லாம் சர்ச் கவனிக்கும் என்றார்
பேச்சு நீண்டது, அம்மணி பாகிஸ்தானின் நிலையினை கதைகதையாய் சொன்னது, அங்குள்ள சிறுபான்மை இந்துக்களின் நிலைபற்றியும் பேச்சு வந்தது
அது மூளைசலவை செய்யபட்ட அம்மணி என்பது புரிந்தது, ஆம் இந்துக்கள் எப்படி போனால் என்ன? என்பது போல் அதன் பேச்சு இருந்தது
ஆனால் இந்துக்களுக்கும் அங்கு ஏக சிக்கல் என்பதை சொல்லிற்று
அந்நாடு உண்மையில் அடிப்படைவாதிகளிடம் சிக்கி கிடக்கின்றது, பாகிஸ்தானிய முற்போக்கு இஸ்லாமியரும் விரட்டபடுகின்றனர், அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்க ஏகபட்ட நாடுகள் இருக்கின்றனவாம்
கிறிஸ்தவர்களுக்கு இவர்களின் சர்ச் போல ஏகபட்ட அமைப்புகள் கொத்தி சென்றுவிடுமாம்
சரி இந்துக்கள் எங்கு செல்வார்கள் என கேட்டால் அம்மணியிடம் மவுனமே பதிலாக வந்தது
ஆம் அந்த சிறுபான்மை எனும் மிக சிறிய இந்துசமூகத்துக்கு உலகில் அடைக்கலமில்லை, இந்த பாரத பெருநாடு மட்டுமே காலம் பந்தாடும் அந்த பறவைகளுக்கு அடைக்கலம் கொடுக்க முடியும்
உலகையும் அண்டை நாட்டில் இந்துக்கள் படும்பாட்டையும் நோக்கும்பொழுது இந்த சட்டதிருத்தம் மகா மகா அவசியமானதே
அங்கு அடித்துவிரட்டபடும் இந்துமக்கள் இந்நாட்டுக்கு வராமல் வேறு எங்கு செல்லமுடியும், எங்கே அவர்களை வாழவிடுவார்கள்? அவர்கள் தாய்வீடு வராமல் எவ்வீடு செல்வார்கள்?
மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தின் ஒவ்வொரு வரியினையும் ஆதரிக்கவேண்டியது இந்நாட்டு மக்களின் கடமை