மாற வேண்டியது சிந்தனையே தவிர உணவு அல்ல..
யூதனுக்கு மீனும் மாடும் முக்கிய உணவு அவன் உலகின் மிகசிறந்த அறிவாளி இனம்
ஜப்பானியன் எல்லா ஜீவராசிகளையும் அதுவும் அரைவேக்காட்டிலே விழுங்குவதில் கில்லாடி அவனும் மிகபெரும் சுறுசுறுப்பான அறிவாளி
ஆட்டுகறியும் கோழியும் விரும்பி உண்ணும் ஜெர்மானியரும் மற்ற ஐரோப்பியர்கள் வாழும் தேசமும் நன்றாகத்தான் இருக்கின்றன
உணவில் ஒரு மண்ணாங்கட்டியுமில்லை, வாழ்வு என்பது அவர்கள் மனதை பொறுத்தது, நாடு என்பது மக்கள் உழைப்பையும் சிந்தனையும் பொறுத்து வாழும்
மாறாக உணவு வகைகளால் ஒரு மாற்றமும் வராது, மாற வேண்டியது சிந்தனையே தவிர உணவு அல்ல..