மாவீரர் தினம் என்பது துக்கமான நிகழ்வாகவே இருந்தது

மாவீரர் தினம் என்பது துக்கமான நிகழ்வாகவே இருந்தது, அன்று ஈழத்தில் பிரபாகரனே நீரும் அருந்தாமல் இருப்ப்பான், அவனின் படைகளும் அன்று விரதமே

ஈழமக்களும் அக்கல்லறைகளை அலங்கரித்து அங்கேயே கண்ணீரோடு விழுந்து கிடப்பர், அதை பார்க்கும் நமக்கோ கண்ணீரும் குழப்பமும் மாறி மாறி வரும்

ஆம், அந்த வீரர்கள் இப்படி செத்தால் நாடு அடையலாம் என நம்பி செத்தார்கள், கடைசிவரை துப்பாக்கியினை கீழே வை எனும்பொழுதெல்லாம் அது இக்கல்லறைகளுக்கு நான் செய்யும் துரோகம் என பிரபாகரன் சொல்லும்பொழுது கண்கள் கலங்கத்தான் செய்யும்

அந்த நாள் முதலில் பிரபாகரனின் பிறந்தநாளாக கொண்டாடபடவில்லை, தொடக்ககால புலிகள் 3 பேர்தான் அவர்களில் ஒருவன் சார்லஸ் ஆண்டனி எனும் சீலன் மற்றும் சங்கர்

இதில் சங்கர் படுகாயமுற்று மதுரையில் இறந்தான் அவன் இறந்தது நவம்பர் 25,

சார்ல்ஸ் ஆண்டனி மற்றும் சங்கரின் நினைவாக அன்று பிரபாகரன் அழுவது வழக்கம்

நிச்சயம் சிவகுமரன்தான் முதல் மாவீரன் ஆனால் சீலனின் நட்பு பிரபாகரனுக்கு பாட்சா படத்து சரண்ராஜ் போல் இருந்தது, அதில்தான் பிரபாகரன் உண்ணாமல் அந்நாளில் அழுவான்

பின் தன் மகனுக்கும் அப்பெயரை சூட்டி பலிகொடுத்தான்

அது கொடும்புலியோ இல்லை வீரபுலியோ ஆனால் அர்த்தத்தோடு மாவீரர்நாளை அனுசரித்தார்கள்

இங்கே தும்பிகள் தீபாவளி கொண்டாடுவது போல் கொண்டாடிகொண்டிருக்கின்றார்கள், கேக் வெட்டி விருந்து வைத்து மகிழ்கின்றனர்

இப்படி ஒரு மெண்டல் கூட்டத்தை திமுகவினருக்கு அடுத்தபடியாக தமிழகம் இப்பொழுதுதான் பார்க்கின்றது