மிகபெரும் சக்தியாக வளரும் எங்கள் தலைவிக்கு வாழ்த்துக்கள்
தன் அகில இந்திய செய்தி தொடர்பாளர் எனும் பதவிக்கு ஏற்ப டெல்லியில் மிக அட்டகாசமான பேட்டியினை கொடுத்திருக்கின்றார் தலைவி குஷ்பு
பென்கள் பாதுகாப்பு பற்றி மோடிக்கு கோரிக்கை வைத்திருக்கின்றார், தினகரன் நல்ல அரசியல்வாதி ஆகமுடியாது என மிக தைரியமாக சொல்லியிருக்கின்றார்
இந்திய அளவில் கோலோச்சும் பிஜேபி தலைகீழாக நின்றாலும் தமிழகத்தில் கால்பதிக்க முடியாது என முழங்கியிருக்கின்றார்
ரஜினியின் அரசியல் ஆட்டம், திருநாவுக்கரசரின் புலம்ப, மோடி கலைஞர் சந்திப்பு, ஸ்பெக்டரம் தீர்ப்பு என எல்லா சிக்கலான கேள்விகளுக்கும் அட்டகாசமான பதிலை வழங்கியிருக்கின்றார் தலைவி
தலைவி கொடுத்த பேட்டியும் அவர் தைரியமாக பதில் சொன்ன துணிச்சலும் அகில இந்திய அளவில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கின்றது
அகில இந்திய அளவில் பெரும் அரசியல்வாதியாக மின்ன தொடங்கி இருக்கும் தங்க தலைவியின் வளர்ச்சியில் சங்கம் மிக்க மகிழ்ச்சி கொள்கின்றது
மிகபெரும் சக்தியாக வளரும் எங்கள் தலைவிக்கு வாழ்த்துக்கள்