மிகப் பெரிய மகளிர் வன்கொடுமை
பொள்ளாச்சி பக்கம் நடந்திருப்பது மிகபெரிய மகளிர் வன்கொடுமை
மகளிருக்காக பொங்கும் அமைப்புகள் ஏதும் இங்கு வராது, அந்த சிறுமி ஆசிபாவுக்கு நிகரான கொடுமைகள் இங்கு நடந்திருக்கின்றது
தேர்தல் இன்னபிற பரபரப்பில் இருக்கும் பத்திரிகைகளும் இன்னும் பல மீடியாக்களும் இதை கண்டுகொள்ளவில்லை எனபதுதான் சோகம்..
முகநூல் உட்பட பல சமூக வலைதளங்களில் வலைவிரித்த கும்பல் பெண்களை ஏமாற்றி பெரும் பாதகத்தினை செய்திருகின்றது
குற்றவாளிகள் அப்படியே மறைக்கபட்டு அப்படியே தண்டனை பெறாமல் வெளிவரவும் கூடும்
கொடநாட்டு கொலைகளே மறைக்கபடும் மாநிலத்தில் இது ஒன்றும் ஆச்சரியமல்ல, இங்குள்ள நிலைப்பாடு அப்படி
எனினும் பெரும் விழிப்புணர்வும் இன்னபிற விஷயங்களும் செய்யவேண்டிய நேரமிது
முறையாக விசாரித்தால் ஆட்டோ சங்கரை, டாக்டர் பிரகாஷை மிஞ்சும் பெரும் மர்மங்கள் அந்த கும்பலிடமிருந்து வரலாம்