மிக கண்டிக்கதக்க விஷயமிது, தடை செய்ய வேண்டிய விஷயமும் கூட
இயேசு, நபிபெருமான், புத்தன் எல்லாம் எவ்வகையோ சந்தேகமில்லாமல் சே குவேராவும் அதே வகை
ஆனால் அந்த மாபெரும் மானிட நேயனை, வராலாற்றின் மாமனிதனை இந்த பாபி சிம்கா ஏதோ ஒரு படத்தில் கலாய்த்துகொண்டிருக்கின்றார்
கூட கருணாகரன் என்பவர் வேறு பிடல் காஸ்ட்ரோ வேடத்தில் இருக்கின்றார்
கவுண்டமணி செந்தில் இணை போல, சே காஸ்ட்ரோ இணையினை கலாய்க்கும் அளவு தமிழ் சினிமா தரம் கெட்டு போயிற்று
ஒரே ஒரு கம்யூனிஸ்ட் இருந்தாலும் இப்படம் வெளிவர கூடாது, மீறி வந்தால் இங்கு ஒருத்தனுக்கும் செங்கொடி பிடிக்க உரிமை இல்லை என பொருள்
தைரியம் இருந்தால் தமிழ்நாட்டு புர்ச்சி தலைவன், தலைவி, அட அவ்வளவு ஏன் எடப்பாடி பன்னீர் ஜோடிகளை கலாய்க்கட்டும் பார்க்கலாம்
சே குவாரா காஸ்ட்ரோவினை கலாய்க்க வந்திருப்பவன் நிச்சயம் பெரும் பதராக இருப்பான், சந்தேகமில்லை
மிக கண்டிக்கதக்க விஷயமிது, தடை செய்ய வேண்டிய விஷயமும் கூட