மின்சார கார்கள் இந்தியாவிலும் வந்தாயிற்று

முன்னணி நிறுவனமான டாடா மோட்டார்ஸ் தனது மின்சார காரை அறிமுகப்படுத்தியுள்ளது, ஒருமுறை சார்ஜ் செய்தால் 300 கிமீ ஓடும் என்கின்றது டாட்டா

பெட்ரோலுக்கு மாற்றுவேண்டும் என உலகம் எண்ணெய் வர்த்தகம் சோவியத் ரஷ்யா மற்றும் அரபு நாடுகளிடம் சிக்கிய 1960களிலே சிந்திக்க தொடங்கியது

ஆம் சோவியத்தின் ஆட்டம் வேறுவகை, இஸ்ரேலை முன்னிட்டு அரபு நாடுகள் ஆடிய ஆட்டம் மறுவகை

இதனாலேதான் அரேபியாவில் அமெரிக்கா புகுந்து அவ்வளவு அழிவினை கொண்டுவந்தது

பெட்ரோலை டம்மியாக்காமல் அவர்களை அடக்கமுடியாது என உலகம் மெதுவாக வேறு வழிகளை யோசித்தது அதில் ஒன்றுதான் மின்சார கார்கள்

இதோ இந்தியாவிலும் வந்தாயிற்று

இனி பெட்ரோலை புறக்கணித்து அரபு நாடுகளை முழங்காலில் இடவேண்டும் என்பது 2001லே எடுக்கபட்ட உலகமுடிவு

அதற்கான காட்சிகள் திட்டமிடபட்டு , 2014 வாக்கில் தொழில்நுட்பங்கள் உறுதிசெய்யபட்டன‌

ஹைபிரிட் எனப்படும் பாதி பேட்டரி பாதி பெட்ரோல் கார்கள் வந்தன இப்பொழுது முழு மின்சார காரும் வந்தாயிற்று

இனி பெட்ரோல் கார்கள் வேண்டாம் என மின்சார கார்களுக்கு சில சக்திகள் உத்தரவிட்டதன் விளைவே கார் கம்பெனி தடுமாற்றம், இது உலகெல்லாம் உண்டு

இதோ மின்சார கார் வந்தாயிற்று, இனி வருங்காலத்தில் நமக்கு இறக்குமதி கச்சா எண்ணெய் குறையும் , நம் பணம் மிஞ்சும்

சரி இனி என்னாகும்?

மிகபெரும் மின்சார உற்பத்தி மையம் வேண்டும், அதற்கு அணுவுலைகள் அவசியம்

அவையும் இன்னும் பல மின்சார உற்பத்தி மையங்கள் வேகமாக பெருக்கபட வேண்டும், அதற்கான காரியத்தில் இந்த அரசும் வேகமாக களமிறங்கிவருகின்றது

விரைவில் தீக்குளிக்க பெட்ரோல் இல்லாமல் மின்சாரம் பாய்ச்சித்தான் இனி பைத்தியகார தொண்டர்கள் சாக வேண்டும்

எல்லா தொழிலும் ஒருநாள் மறையும் என்பதற்கு பெட்ரோலிய பரகாசுர தொழிலும் விதிவிலக்கு அல்ல..