மிலாது நபி

அந்த அரேபியாவின் மக்கள் சிதறிகிடந்தனர், இன குழுக்களாக பிரிந்து மோதிகொண்டிருந்தனர். அவர்களை வழிநடத்தவோ அவர்களுக்கு நல்வழிபோதிக்கவோ யாருமில்லை, உலகம் அவர்களை பொருட்டாக மதிக்கவில்லை

அங்கு வாழ்ந்த யூதர்கள் ஒருவித உயர் மனப்பான்மையில் அவர்களை தாழ்த்தித்தான் வைத்திருந்தனர். அம்மக்களை ஒருங்கிணைக்கவோ அந்த மூர்க்கமான சமூகத்தில் அமைதி கொண்டுவரவும் யாருமில்லை

இந்ந நிலையில்தான் இறைவனின் தூதனாக நபிபெருமான் அவதரித்தார், நிச்சயமாக அவர் அறிவிக்கபட்டு இந்த உலகிற்கு கொடுக்கபட்டவர்

அவர் இளமையிலே தனக்கான பாதையினை தேர்ந்தெடுத்தார், இறைவனின் கரம் அவரோடே இருந்தது.

அந்த சமூகத்தின் தனக்கான தூயபாதையினை தேர்ந்தெடுத்தார், அவரே முதலில் அதில் நடந்தார், பின் அவரை அடியொற்றி பலர் நடந்தனர். முதலில் அவரை விரட்டினாலும் பின் சமூகம் அவரை ஏற்றுகொண்டது

அவர் பின் அணிதிரண்டது, அந்த மக்களுக்கு நல்வழியினை போதித்தார், அம்மக்கள் அவரை கடவுளின் தூதராக எண்ணி அவருக்கு அஞ்சி நடந்தனர்.

அரபு வரலாறு மட்டுமல்ல, உலக வரலாற்றிலே மிக முக்கியமான பிறப்பு அவர்.

அவரிடம் மிக மிக நல்ல விஷயம் ஒன்று உண்டு, எந்த மதத்தையும் அவர் வெறுக்கவில்லை.

யூதம் கிறிஸ்தவம் என எல்லாமதத்தின் கொள்கைகளையும் ஏற்றுகொண்டுதான் மார்க்கத்தை உருவாக்கினார்

யூதர்கள் அவரை விரட்டினார்களே ஒழிய அவர் யூதர்களை வெறுக்கவில்லை, மாறாக கடவுள் எல்லோருக்கும் பொதுவானவர் யூதர்களுக்கு மட்டுமல்ல என்பதில்தான் அவர் யூதர்களால் ஒரு மாதிரியாக பார்க்கபட்டார்

நிச்சயமாக சொல்லலாம், இவ்வுலகிற்கு மிக தேவையான , மானிடம் மானிடமாக வாழும் கருத்தைத்தான் அவர் சொன்னார், அதில் சில சர்ச்சைகள் வருமாயின் அது அவர் பின்னால் வந்தவர்கள் உருவாக்கிகொண்டதே தவிர நபிபெருமான் சொன்னது அல்ல‌

இந்த ஆப்கனின் தாலிபான்கள், சிரியாவின் ஐ.எஸ் எல்லாம் நபிபெருமான் சொன்ன புனிதமான இஸ்லாமை பின்பற்றுபவர்களே அல்ல, அவர்கள் சைத்தான்கள்.

இந்த உலகின் பெரும் மாறுதல்களை கொண்டுவந்தவரகள் என்ற வரிசையில் நபிபெருமானுக்கு நிச்சயம் பெரும் இடம் உண்டு, அரபிய பகுதியின் தலைவிதியினையே மாற்றியவர் அவர்

அவரின் வழிவந்த கலீபாக்கள் ஆப்ரிக்கா, ஐரோப்ப்பா முதல் இந்தியா வரை மிக பெரும் சாம்ராஜ்யத்தை நிறுவினார்கள், அது மிக பெரும் சொர்க்கமாக இருந்திருக்கின்றது, மிக மிக நியாயமான ஆட்சி இறைவன் பெயரால் நடந்திருக்கின்றது

பல்லாண்டுகள் அது நீடித்தும் இருக்கின்றது , அதன் மூலம் உலகெல்லாம் பரவியும் இருக்கின்றது

இஸ்லாம் என்ன கொண்டுவந்தது என கேட்டால் தயக்கமின்றி சொல்லலாம், அது சமத்துவத்தை கொண்டு வந்தது, சமதர்மத்தை கொண்டு வந்தது, ஆண்டவன் முன் எல்லோரும் சமம் எனும் ஒரே சிந்தனையினை கொண்டுவந்தது

இந்தியாவில் சாதி போன்ற கொடுமைகளை ஒழித்ததில் இஸ்லாமுக்கும் பங்கு உண்டு. இஸ்லாம் ஜாதியினை வென்றது ஒத்துகொள்ளத்தான் வேண்டும்

தமிழகத்தில் ஜாதி முன் தோற்ற மதம் எது தெரியுமா? அது கிறிஸ்தவம், அதனால் ஜாதியினை களைய முடியவே இல்லை

ஆனால் இஸ்லாம் அட்டகாசமாக ஜாதியினை ஒழித்தது

ஒரு விஷயத்தில் அவரின் தீர்க்கதரிசனம் மிக சரி, தனக்கு பின் தன் பிறந்த வீடு வாழ்ந்த வீடு உட்பட எல்லா அடையாளத்தையும் இடித்துவிட சொன்னார். அவற்றால் பிற்காலத்தில் சர்ச்சை வரும் என நம்பியிருகின்றார்

அதனால்தான் அந்த பெருமகனுக்கு கல்லறை தவிர அடையாளமில்லை, அங்கும் வழிபட முடியா அளவு கட்டுப்பாடுகள் உண்டு

அவரின் அந்த தீர்க்கதரிசனத்தாலே அரேபியாவில் ஜென்மபூமி சிக்கல் இல்லை, நபி பெருமான் அந்த ஏற்பாட்டை செய்திராவிடால் இன்று பெரும் சிக்கல் வெடித்திருக்கலாம்

நிச்சயம் அவர் கடவுளின் தூதனாயிருந்தார்

அவர் மிக சரியான மக்கள் சமூக‌ மருத்துவர், ஆனால் பின்னாளில் சிலர் அவர் வழியில் வந்து குழப்பியிருக்கலாம், அது அவரின் தவறல்ல மருத்துவத்தை சரியாக பயிலாதோர் தவறு.

யூதர் நபிபெருமானின் ஆட்சியிலும் இஸ்லாமிய கலீபாக்கள் ஆட்சியிலும் மகா பாதுகாப்பாய் இருந்தனர், நபியின் மகா பெருந்தன்மையான போதனைக்கும் ஆட்சிக்கும் அது சான்று

ஆனால் இன்றைய யூத நாட்டில் இஸ்லாமியர் அமைதியாய் வாழமுடியவில்லை என்பதுதான் மகா சோகம், வரலாற்று முரண்

கடவுளின் கடைசி தூதராக வந்து வாழ்ந்து போதித்த நபிபெருமானுக்கு பிறந்த நாளாக மிலாது நபி கொண்டாடபடுகின்றது

மிலாது என்றால் பிறப்பு என பொருள், நபி பிறந்த நாள் அது

கிறிஸ்மஸ் போலவே மிலாது நபி கட்டாயம் கொண்டாட வேண்டிய பண்டிகை அல்ல, கிறிஸ்துவும் நபியும் தங்கள் பிறந்தாளை கொண்டாட சொல்லவே இல்லை

ஆனால் நல்லவர்கள் பிறந்தநாளை கொண்டாடாவிட்டால் என்ன நன்றிகடன் என்ற வகையில் உலகம் கொண்டாடுகின்றது

மனிதனை மனிதனாக நேசித்த, கடவுளின் பால் மக்கள் மனதை திருப்ப உழைத்த, இந்த உலகம் மிக அமைதியாக வாழ பல உன்னத கருத்துக்களை சொல்லிவிட்டு சென்ற அந்த மாமனிதனின் பிறந்தநாளை இஸ்லாமிய பெருமக்கள் மட்டுமல்ல‌

சமத்துவத்தையும், சம தர்மத்தையும் விரும்பும் எல்லோரும் கொண்டாடலாம்