மில்லியன் டாலர் கேள்வி
விக்ரம் லேண்டர் சிதறிகிடக்கும் பாகங்களை கண்டறிந்துவிட்டதாக நாசா சொல்லிற்று, இந்தியாவின் தயாரிப்பு ஒன்று உடைந்து கிடப்பதில் அவ்வளவு சந்தோஷம்
இதுபற்றிய ஆய்வில் தமிழகத்தை சேர்ந்த ஒருவர் தீவிரமாக இருந்தார் எனவும் அவர்மூலமே இதைஉறுதி செய்ய முடிந்தது எனவும் நாசா சொல்கின்றது
அவர் இங்கிருந்து கண்டறிய நாசா எதற்கு? சரி கண்டறிந்தவரை ஏன் தமிழகத்திலே விட்டு வைத்திருகின்றார்கள் என்பதுதான் தெரியவில்லை
எப்படியாயினும் இந்தியா நிலவில் தொலைத்ததை ஒரு இந்தியன் கண்டறிந்துவிட்டான்
ஆனால் இது விக்ரம் லேண்டரா என்றால் அங்குதான் விஷயம் இருக்கின்றது. கடந்த 50 ஆண்டுகளில் பல நாடுகள் வெளி தெரிந்தும் தெரியாமலும் ஏகபட்ட முயற்சிகளை நிலவில் செய்தன
கடந்த ஆண்டு இஸ்ரேலிய கலன் ஒன்றும் இதே போல் வெடித்து சிதறியது
இப்போது காங்கிரஸ் போல சல்லி சல்லியாக நொறுங்கி கிடப்பது விக்ரம் லேண்டரா இல்லை வேறு நாட்டு கலத்தின் சிதறலா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி
