மீனாட்சிபுரம் சம்பவத்தில் திருமா ஆராய்ச்சி
மீனாட்சிபுரம் சம்பவத்தில் திருமா ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் வாங்கிவிட்டார், அவர் விருப்பம் ஆய்வு செய்தார் வாங்கினார்
ஆனால் கீழவெண்மணி படுகொலைமுதல், முதுகுளத்தூர் கலவரம் முதல் பாபர் மசூதி இடிப்பு வரை ஏகபட்ட சம்பவங்கள் டாக்டர் பட்டம் வாங்க தயாராக இருக்கின்றன
ஆராய்ச்சி செய்யத்தான் யாருமில்லை, செய்துவிட்டு இருக்க போவதுமில்லை
ஆனாலும் மீனாட்சிபுரத்தில் தலித்துக்கள் மதம் மாறினார்கள் என்பதற்காக ஆராய்சி செய்து டாக்டர் பட்டம் வாங்கிய திருமா, அதே நெல்லைமாவட்டத்தின் கொடியங்குளம் படுகொலைகள் இன்னபிற சம்பவங்களுக்காக ஏன் டாக்டர் பட்டம் வாங்கவில்லை என கேட்க கூடாது
மீனாட்சிபுரம் சம்பவம் வாஜ்பாய் முதல் அன்றைய முதல்வர் ராமசந்திரன் வரை அலறியடித்து ஓடிவர செய்த மதமாற்ற சம்பவம் என்பதால் திருமாவின் ஆராய்ச்சி இருந்தது
மற்ற சம்பவங்களில் மதம் இல்லாமல் வெறும் சாதிமோதல் என்பதால் திருமாவிற்கு டாக்டர் அல்ல, கம்பவுண்டர் பட்டம் வாங்க கூட ஆசை இல்லை
மிஸ்டர் தொல்.திருமா வளவன், முன்பு குஷ்பு இந்த பாலியல் பற்றி ஏதோ சொன்னபொழுது எவ்வளவு வழக்கு தொடர்ந்தீர்
எவ்வளவு வழக்குகள் தொடுத்தீர்? நீதிமன்றம் இருக்கும் இடமெல்லாம் எம் தலைவியினை இழுத்து பாடாய் படுத்தினீர்
இப்பொழுது இந்த Devi Somasundaram என்பவர் அதே விவகாரத்தை பேசுகின்றார்
எங்கே போய் தொலைந்தீர் அய்யா?
ஒழுங்காக வந்து இந்த Devi Somasundaram மீது பத்து வழக்குகளை பாய்ச்சவும், இல்லாவிட்டால் சங்கம் சும்மா இருக்காது.
உடனே தேவி மீது வழக்கு பதியவில்லை என்றால் உமது டாக்டர் பட்டத்தை பறிக்க சங்கம் களமிறங்கும்
ஏம்பா கலாச்சார காவலர்களா? எங்கே போய் தொலைந்தீர்கள்
இந்த தேவியினை பிடித்து உள்ளே போடுங்கள் இல்லை ஒழுங்காக வந்து சங்கத்தில் சேர்ந்து பரிகாரம் தேடுங்கள் ரேஸ்கெல்ஸ்….