முக ஸ்டாலின் தமிழகத்துக்கான கடும் மறுமலர்ச்சியில் இறங்கிவிட்டார்
முக ஸ்டாலின் தமிழகத்துக்கான கடும் மறுமலர்ச்சியில் இறங்கிவிட்டார் என குதுகலிக்கின்றன உபிக்கள்
40 ஆயிரம் ஏரிகளை தூர்வாருகின்றாராம் உதயநிதி, உப்பள தொழிலாளர் சிக்கலை எல்லாம் பார்த்து கண்ணீர் வீடுகின்றாராம் கனிமொழி
ஆக கலைஞர் கருணாநிதி என்பவர் தமிழ்நாட்டுக்கு ஒன்றுமே செய்யவில்லை, அவர் செய்த பாவத்துக்கு பரிகாரமாக வாரிசுகள் வந்திருக்கின்றன என சொல்லாமல் சொல்கின்றன உபிக்கள்
இது இருக்கட்டும்..
ஆக 40 ஆயிரம் கண்மாய்களை திமுக தூர்வாருகின்றது, அவர்கள் உண்மையான தமிழ் அபிமானிகள் தமிழர் வாழ உழைக்கும் சிங்கங்கள், யானைகள், மாடுகள் என்பதால் நம்மால் ஒரு விஷயத்தை உறுதியாக சொல்லமுடியும்
ஆம் திமுகவினர் இத்தோடு விடமாட்டார்கள்
இனி உதயநிதி தலமையில் குளத்தை நிரப்பி வயல்காட்டை திருத்தி உழுது,நாற்று நட்டு நெல்லை பொன்னாய் விளைய வைத்து அரிசியாக்கி, ரூபாய்க்கு 3 படி அரிசியாக தமிழருக்கு கொடுக்காமல் ஓயமாட்டார்கள்