முடிவு டிரம்ப் முன்னால் இருக்கின்றது
ஜிப்ரால்டரிலிருந்து கிளம்பலாம் என அந்நாடு உத்தரவிட்டதை அமெரிக்கா கொஞ்சமும் ரசிக்கவில்லை
ஜிப்ரால்டர் என்பது பிரிட்டனின் அடிமை நாடு, பிரிட்டன் உத்தரவை அடுத்தே ஜிப்ரால்டர் ஈரானின் கப்பலை விடுவித்தது
இதில் அமெரிக்காவின் கட்டளையினை மீறியே விடுவித்தது பிரிட்டன்
இதனை மிக கடுமையான அவமானமாக எண்ணிய அமெரிக்கா, கப்பல் ஜிப்ரால்டரை விட்டு வெளியே வரட்டும் ஏதாவது ஒரு நாடு அதை முடக்கும் என்கின்றது அமெரிக்கா
கவனியுங்கள் பிரிட்டன் விடுவித்த கப்பலை நடுகடலில் மடக்குவோம் என அமெரிக்கா அறிவித்தால் அது பிரிட்டனுக்கு எவ்வளவு பெரும் அவமானம்?
அவர்கள் பழனிச்சாமி பன்னீர் வகையாக மாறிவிட்டதால் கம்மென்று இருக்கின்றார்கள்
ஈரான் தன் 2 மில்லியன் பேரல் எண்ணெயும் கொடுத்துவிட்டு, இப்பொழுது கப்பலும் சிக்கி கொண்டதில் கடும் அப்செட்
எனினும் எங்கள் கப்பல் இங்கு வந்து சேரவில்லை என்றால் சும்மா விடமாட்டோம் என்கின்றது ஈரான்..
எந்த கடல் எல்லைக்கும் ஈரானின் கப்பல்படை செல்லும் என அவர் சொல்லியிருப்பது ஒருவித பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றது
ஈரானும் சும்மா அல்ல, அந்த பினாமி பனாமா நாட்டு பெயரில் இருந்து தன் முகமூடியினை கழற்றிவிட்டு அது எங்கள் கப்பல் என சொல்லி, ஈரானிய கொடியினை ஏற்றி பறக்கபட்டிருக்கின்றது
புதிய கொடி, புதிய பெயருடன் கப்பல் ஜிப்ரால்டரில் இருந்து கிளம்புகின்றது, இனி அமெரிக்கா என்ன செய்யுமோ தெரியவில்லை
முடிவு டிரம்ப் முன்னால் இருக்கின்றது
பிரிட்டனை அவமானபடுத்தியது அமெரிக்கா, இனி அமெரிக்கா முகத்தில் ஈரான் கரிபூசுமா என்பது இனிதான் தெரியும்