முதலில் தமிழக டிவிக்களை மூட வேண்டும்

இத்தனை டிவி மீடியாக்கள் தமிழகத்தில் இருக்கின்றன‌

டீக்கு வழியற்றவன், துண்டுபிடிக்கு காத்திருப்பவனை எல்லாம் விவாதம் என அழைத்து என்னென்ன காமெடியல்லாமோ செய்கின்றன‌

கார்த்தி சிதம்பரம் லட்டு போல சிக்கியிருக்கின்றார்

ஒரு டிவி அழைத்து உங்க அப்பாவுக்கு அநீதி நடந்ததா? ஏர்செல் வழக்கில் தயாநிதி உள்ளே செல்ல வேண்டுமா? அந்த வழக்கில் மன்மோகன் என்ன செய்தார்

என்னய்யா பிரதமர் அவர்? ஸ்பெக்ட்ரம் விவகாரம் தெரியாது என்றார், நிலக்கரி தெரியாது என்றார்,உரம் விவகாரம் தெரியாது, ஏர்செல்லும் தெரியாது என்றால் என்ன பிரதமர்

சரி உங்க டாடி என்ன செய்தார்? டாடி கூட தயாநிதிமாறனும் இருக்க வேண்டும் என்கின்றீர்களா என விவாதித்தால் எப்படி இருக்கும்?

ஆனால் செய்யமாட்டார்கள்

எவனாவது ஆலமரத்தடியில் மல்லாக்க கிடப்பவனை இழுத்து வந்து ஒரே தேசம் ஒரே ரேஷன் கார்டில் உனக்கு அரிசி எவ்வளவு குறையும் சொல் என கேட்டுகொண்டே இருப்பார்கள்

அவனும் அண்டார்டிகாவின் அடியாழம் வரை சென்று அலசுவவதாக நினைத்து அறுத்து தள்ளிகொண்டிருப்பான்

முதலில் தமிழக டிவிக்களை மூட வேண்டும்