முதலில் நான் ஒரு இந்து..

பன்னீர் செல்வத்து மகன் ரவீந்திரநாத் “முதலில் நான் ஒரு இந்து..” என சொல்லிவிட்டதை ஆளாளுக்கு கலாய்க்கின்றார்கள்

இதில் திமுக, அதிமுக, காங்கிரஸ் என எல்லா கோஷ்டிகளும் உண்டு

ஆனால் தூய்மையான இந்து கோஷத்தை முதலில் இங்கு எழுப்பியவர் பசும்பொன் தேவர்

அவர் தூய இந்துவாக வாழ்ந்தார், இந்துநெறியில் நின்றார், நான் ஒரு இந்து என எல்லா வகையிலும் நிரூபித்தார்

நாடும் மதமும் இரு கண்கள் என்றார் அவர்

அவர் சொன்னதைத்தான் இவரும் சொல்கின்றார்

ஆனால் அவர் நினைவிடத்துக்கு எல்லா கட்சி தலமையும் செல்லும் வணங்கும், குங்குமம் வைக்கும் கொண்டாடும்

அவர் சொன்னதை ரவீந்திரநாத் சொன்னால் பரிகசிப்பார்கள்

ஏதும் புரியுமா?

புரியாது, இதுதான் தமிழக அரசியல்

எங்கே இவரை கலாய்க்குமுன் அவரை அதாவது பசும்பொன் தேவரை கலாய்க்கட்டும் பார்க்கலாம்