முதல்வர் பழனிச்சாமிக்கு கருப்பு பூனை பாதுகாப்பு : செய்தி
முதல்வர் பழனிச்சாமிக்கு கருப்பு பூனை பாதுகாப்பு : செய்தி
பொதுவாக பெரும் தீவிரவாத இயககத்தின் இலக்கில் இருப்பவர்களுக்குத்தான் கருப்பு பூனை பாதுகாப்பு கொடுப்பார்கள், பழனிச்சாமிக்கு என்ன மிரட்டல்?
சொந்த கட்சியினரை தவிர யாரும் அவரை திட்டியதாக தெரியவில்லை, ஆக உலகிலே சொந்த கட்சியினருக்கு அஞ்சி கருப்பு பூனை பாதுகாப்பு கொடுக்கபட்ட ஒரே முதல்வர் பழனிச்சாமிதான்
இதுதான் சாக்கு என எவனாவது அஜீத்தின் ஆமை குஞ்சுகளில் ஒன்று, இது விஜய் ரசிகர்களுக்கு அஞ்சி செய்யபட்டிருக்கும் ஏற்பாடு என கொளுத்திபோட்டால் முடிந்தது விஷயம்
அப்படி ஒரு செய்தி வந்துவிட்டால் அந்த ரஷ்ய நாட்டு பிச்சைக்காரன் அருகில் அந்த தயாரிப்பாளரும் கோவில் வாசலில் அமர்ந்துவிட வேண்டியதுதான்.
ஆனாலும் மிஸ்டர் பழனிச்சாமி இந்த கருப்பு பூனை எல்லாம் முழுக்க நம்பிவிடாதீர்கள்
ஆனானபட்ட ஜெயலலிதாவினையே கருப்பு பூனைகளால் காப்பாற்ற முடியவில்லை, அவர்கள் முழு விழிப்ப்பாக இருந்திருந்தால் ஜெயா மர்மமே நடந்திருக்காது
கருப்பு பூனைக்கே கழுத்தில் மணி கட்டி ஓட அடிக்கும் வித்தகர்கள் உள்ள கட்சி அது, ஆமாம்