முதல் மனைவியினை விட்டு இரண்டாம் மனைவி கட்டிய யாரும் அதன் பின் பழைய இடம் பெறவில்லை என்பார்கள்
தமிழ் சினிமாவில் ஒரு சென்டிமென்ட் உண்டு
முதல் மனைவியினை விட்டு இரண்டாம் மனைவி கட்டிய யாரும் அதன் பின் பழைய இடம் பெறவில்லை என்பார்கள் ஜெமினி கணேசனை தவிர
ஜெமினி வழி தனி வழி
பாலுமகேந்திரா,பாக்யராஜ், பிரகாஷ்ராஜ் என பலரை காட்டமுடியும். இரண்டாம் திருமணம் செய்தபின் அவர்களின் கொடி பழையமாதிரி பறக்கவில்லை
கிரிக்கெட்டில் இந்த சாபம் பெற்றவர் சிலர் உண்டு
பட்டோடியினை விடுங்கள் அது பழங்காலம், இந்திய கிரிக்கெட்டின் திருப்புமுனை என அசாருதீனை சொல்லலாம்
மிக சிறந்த ஆட்டக்காரர் அவர், வந்த புதிதில் அவர் காட்டிய அதிரடியும் பிரசித்திபெற்றது. மிக சிறந்த ஆட்டக்காரர்
அந்த மணிகட்டினை திருப்பும் ஆட்டமும்,அந்த துல்லியமான பீல்டிங்கும் கொண்ட அசார் தனிபிறவி
ஆனால் சங்கீதா பிஜ்லாணியினை இரண்டாவது மணந்தபின் காணாமல் போனார்
அசாரை போலவே ஜடேஜா, கங்குலி என பலர் கிசுகிசுக்களில் சிக்கி அதன்பின் எழவே இல்லை
கிரிக்கெட்டில் சர்ச்சைகளில் சிக்காதவர் இருவர் ஒருவர் கபில்தேவ், இன்னொருவர் டெண்டுல்கர்
கிரிக்கெட்டே வெற்றிக்கு வழி என ஆடியவர்கள் அவர்கள்தான், இந்திய கிரிக்கெட்டின் அசைக்கமுடியா இடம் அவர்களது
இருவருமே மிகபெரும் ஜாம்பவான்கள் என்பதை கடைசி வரை நிலைநிறுத்தினார்கள்
இந்த வரிசையில் வரவேண்டியவர் டோனி , ஆனால் இப்பொழுது மதிப்பிழந்து தோற்ற வீரராக நடையினை கட்டுகின்றார்
கிட்டதட்ட அசார் வரிசை
நேற்று ஏதோ ஒரு படத்தில் லட்சுமி ராய் பாம்பாக வந்து டிவியில் சாபமிட்டுகொண்டிருந்தார்
அதை பார்த்து “அண்ணாச்சி எல்லாம் இவா கொடுத்த சாபம்தான் அண்ணாச்சி டோனிக்கு,இப்படி ஆயிட்டான் பாவம்
அவன் மட்டும் சமயபுரம் கோவிலுக்கு வந்து சாபநிவர்த்தி பண்ணிட்டான்னா எல்லாம் சரியாவும் அண்ணாச்சி , பெண் பாவம் பொல்லாதது அண்ணாச்சி” என உணர்ச்சி பூர்வமாக சொல்லிகொண்டிருந்தான் அறை நண்பன்
