முன்னாள் புலிகள் இப்படித்தான் சொல்கின்றார்கள்

நமக்கு தெரிந்தவரை முன்னாள் புலிகள் இப்படித்தான் சொல்கின்றார்கள்

அங்கிள் சைமன் ஈழம் சென்றது நிஜம், புலிகளின் கலைபிரிவுக்கு பாடம் நடத்தியதும் நிஜம் ஆனால் பிரபாகரனை சந்தித்தது வெறும் 2 நிமிடமே

அதுவும் புலி உடையில் சந்திப்பேன் என அடம்பிடித்து அது நடக்காமல், பிரபாகரனை கட்டி தழுவுவேன் (பிரபாகரன் யாரையும் தழுவமாட்டார் ஒரு இடைவெளி இருக்கும்) என அடம்பிடித்து புலிகள் முறைக்க அதுவுமின்றி தள்ளி நின்று படம் எடுத்தது நிஜம்

அங்கிள் தனியாக புலி சீருடையில் துப்பாக்கியோடு படம் எடுத்திருக்கின்றார், புலிகள் வழக்கபடி எல்லா படமும் பிரபாகரன் பார்வைக்கு சென்றுவந்த பின்பே வெளியிடபடும், அப்படி இவர் சீருடையுடன் நின்றதை பார்த்து அதிர்ந்த பிரபாகரன் சொன்ன வசனம் இது

“இந்த டைரக்டர் விசரோ?, நம்முடைய சீருடையில வைகோ அண்ணன் இருந்தபடம் அவருக்கு இந்தியாவுல சிக்கலாயிபோச்சு, நாம் இப்பொழுது இந்திய உறவை பேணும் அவசியத்தில் இருக்கிறோம்

இந்த படம் வெளியில வந்தால் நாம் இந்திய தமிழருக்கு பயிற்சி கொடுக்குறோம்னு நமக்கு பெரிய சிக்கலாயிரும், இந்த டைரக்டர் மேல ஒரு புள்ளி வையுங்கோ”

புலிகள் பாஷையில் புள்ளி என்றால் சந்தேகத்துகுரியவர் என்பது, இது ஆங்காங்கு கசிந்து பல புலிகள் என்ன டைரக்டர் நீங்க புள்ளியாமே என கலாய்க்க தொடங்கினராம்

இதுதான் நடந்த கதை என்கின்றார்கள், தான் அவமானபடுத்தபட்டதாக உணர்ந்த சைமன் பிரபாகரன் மேல் ஒருவித கோபத்தோடு திரும்பினார்

அந்த கோபத்தில் இப்பொழுது அட்டகாசமாக பிரபாகரனை பழிவாங்கி கொண்டிருக்கின்றார்