மும்பையினை நொறுக்கினால் இந்தியாவின் பொருளாதாரம் சரியும் என்பது பாகிஸ்தான் கணக்கு
மும்பை இந்தியாவின் மகா முக்கிய பொருளாதார கேந்திரம், கல்கத்தாவினை கம்யூனிஸ்டுகளும் சென்னையினை திராவிட கோஷ்டிகளும் போல மும்பையினை கெடுக்க யாருமில்லை என்பதால் அது அசுர வளர்ச்சியில் முதலிடத்தை பெற்றுவிட்டது
மும்பையினை நொறுக்கினால் இந்தியாவின் பொருளாதாரம் சரியும் என்பது பாகிஸ்தான் கணக்கு, கராச்சியில் இருந்து தொட்டுவிடும் தூரம் என்பதால் அடிக்கடி மும்பை பாகிஸ்தானின் இலக்காகும்
அதுவும் 1990க்கு பின் மும்பை குறிவைத்து அடிக்கபட்டது, 1993 குண்டுவெடிப்புகள் மறக்க கூடியவை அல்ல அதன் பின்னும் சிறிதும் பெரிதுமாக ஏகபட்ட வெடிப்புகள், வாஜ்பாயின் வருகைக்கு முன்பு கூட 2003ல் வெடித்தது
அப்படிபட்ட மும்பையில் பெரும் தாக்குதல் நடத்த 2008ல் லஷ்கர் இயக்கம் திட்டமிட்டது, 2009 என்பது பின்லேடன் கொல்லபடாத காலம், அல் கய்தாவின் ஆசீர்வாதத்தில் வெறியாட்டங்கள் நடந்த காலம்
நிச்சயம் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ அதற்கு உதவியது
11 பேர் கொண்ட குழு கராச்சி வழியாக வந்து குஜராத்திய மீன்பிடி படகை கைபற்றி மீணவனை கொன்று ஜாலியாக மும்பை கடற்பரப்பில் வந்து இறங்கியது
இதுவரை அப்படி ஒரு வியூகத்தில் அவர்கள் ஊடுருவில்லை என்பதால் யாரும் எதிர்பாரா தாக்குதல் அது
வந்தவர்களிடம் பெரும் திட்டம் இருந்தது, எதெல்லாம் இலக்கு என மிக சரியாக திட்டமிட்டு வைத்திருந்தார்கள், அவர்களின் இலக்கு ஐரோப்பியர் மற்றும் யூதரை சிறைபிடிப்பது அல்லது கொல்வது
அப்படியே போனசாக இந்தியரையும் கொல்வது
அவர்கள் திட்டபடி மிக சரியாக இயங்கினார்கள், ஒரு கோஷ்டி தாஜ் ஹோட்டலை கைபற்ற ஒரு கோஷ்டி நரிமண் பகுதி யூத குடியிருப்பை வளைத்தது ஒரு கோஷ்டி கவனத்தை திருப்ப ரயில்நிலையத்தில் சுட்டது
ஆம் ரயில் நிலையத்தில் சுட்டது கவனத்தை திசை திருப்பவே
மும்பை அலறியது, நேரம் செல்ல செல்ல பலி எண்ணிக்கை கூடியது, அரசுகள் திகைத்தன மாநில காவல்துறை முழு வீச்சில் இறங்கி நிலமையின் விபரீதம் புரியாமல் சிலரை இழந்தது
இந்த இடத்தில் ஒரு விஷயம் கடுமையாக சொதப்பியது அது மத்திய கமாண்டோ படையினரின் வருகை, உண்மையில் நம்மிடம் அன்று விழிப்பான கமாண்டோ படை இல்லை
ஆளாளுக்கு வீட்டில் இருந்த கமாண்டோக்களை எழுப்பி அவர்கள் குளித்து சாமி கும்பிட்டு சீருடை அணிந்து துப்பாக்கிக்கு எண்ணெய் போட்டு விமானத்துக்கு வந்து அதற்கு பெட்ரோல் போட்டு வர ஒரு நாள் ஆனது
ஆம் அன்றைய நிலை அப்படித்தான் இருந்தது

எனினும் மகராஷ்ட்ர காவல்துறை நிலைமையினை கட்டுக்குள் வைத்திருந்தது பின் கமாண்டோக்கள் வந்து காட்சிகளை முடித்து வைத்தனர்
ஒருவழியாக கிட்டதட்ட 200 பேரை பலிகொண்டு, 400 பேரை காயபடுத்தி இன்னும் சில காவல் அதிகாரிகளின் உயிர்களோடு அந்த கொடுங்காலம் கடந்தது
உலக அளவில் பெரும் பதற்றத்தை அது ஏற்படுத்தியது, இந்தியா போர் தொடுக்க தயாரனது போல் காட்சிகள் நடந்தன
ஆனால் இது பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே யுத்தம் நடக்க செய்ய தீவிரவாதிகள் செய்த சதி என இருநாடுகளும் சொல்லிகொண்டு பின்வாங்கின
உண்மையில் காங்கிரஸ் அரசு யுத்தத்தை விரும்பவில்லை என்பதுதான் நிஜம், அது பின்வாங்கிற்று
இவ்வளவுக்கும் கசாப் தன்னை தயார்படுத்தியது ஐ.எஸ்.எஐ என சொன்னான், பாகிஸ்தான் அமைச்சரே கசாப் ஒரு பாகிஸ்தானி என சொன்னார்
இதுபோக மும்பையில் இவ்வளவு பெரும் தாக்குதல் நடத்த யார் உதவினார்கள் என்ற பட்டியல் உண்டு, இன்னும் பெரும் ஆதாரம் உண்டு
அமெரிக்கா டேவிட் ஹெட்லி (அது அவனின் போலி பெயர்) எனும் அல்கய்தா உறுப்பினரை பிடித்து இது சம்பந்தமாக காட்டிய தீவிரத்தில் கொஞ்சமும் இந்தியா காட்டவில்லை
இஸ்ரேல் இதன் பின்பு இந்தியாவுடன் மிக நெருங்கி வந்தது , யூத மக்கள் மேல் நடத்தபட்ட தாக்குதலை புரிந்துகொண்டு அது பல காரியங்களை செய்தது. அவைகள் பின் புல்வாமா தாக்குதலில் இந்தியாவுக்கு உதவின
தேசத்தில் ஒரு எழுச்சி ஏற்பட்டது, அரசு பாகிஸ்தானுடன் யுத்தம் செய்யவில்லையே தவிர உள்நாட்டு பாதுகாப்பு பலபடுத்தபட்டது, ஐ.என்.ஏ முழு பலத்துடன் உருவாக்கபட்டது கடற்கரையோர பாதுகாப்பு பலபடுத்தபட்டது
இதே பாணியில் ஊடுருவமுயன்ற சில தாக்குதல்கள் வெளிதெரியாமல் முடிக்கபட்டன
அதன்பின் பெரும் தாக்குதல் நடத்தமுடியாமல் பாதுகாப்புகள் பலபடுத்தபட்டன, கசாப் தூக்கிலடபட்டான்
எனினும் லஷ்கர் இயக்கத்து தலைவனான சயீத் பாகிஸ்தானில் இன்னும் நலமாய் வளமாய் வாழ்ந்துகொண்டிருக்கின்றான்
மெல்ல தேசம் மெதுவாக மீண்டெழுந்தாலும் இந்திய மண்ணில் புகுந்து அவர்கள் தாக்கியது தேசத்தின் மாபெரும் வலியான வரலாறுகளில் இன்று, பாராளுமன்ற தாக்குதலுக்கு அடுத்த அவமானம் இது
இதெல்லாம் சேர்த்து வைத்துத்தான் பின்பு புல்வாமாவில் இந்தியா மொத்தமாக போட்டு அடித்தது
அவர்கள் ஆண்டாண்டு காலம் உள்ளே வந்து சுடுவார்கள், நாம் எல்லை தாண்டவே மாட்டோம் என்றிருந்த நிலை மாறி திருப்பி அடிக்க 11 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன
இனி அவ்வாறான தாக்குதல்கள் நடக்காது என தேசம் நம்புகின்றது, மகா மகா உறுதியான பாதுகாப்பும் உளவுதகவல் பரிமாற்றமும் அதை உறுதிபடுத்துகின்றன
கொடுந்தாக்குதல் நடந்தபின்பும் சிலிர்த்தெழுந்தது மும்பை
இந்த தாக்குதலில் உயிரழந்த இந்திய மக்களும் காவலர்களும் தேசத்தின் கடலோர பாதுகாப்பின் முக்கியத்துவத்தை காட்டிவிட்டு செத்த தியாகிகள், இன்று இந்த அரசு கடல் வளைய பாதுகாப்புக்கு கொடுக்கும் முக்கியத்துவமே தனி
இதன் பின்பே பாதுகாப்பு , உளவு அமைப்புகள் புதுப்பிக்கபட்டு கமாண்டோ படையினர் எந்நிலைக்கும் தயராக வைக்கபட்டனர்.
அந்த தியாகிகளுக்கும் காவலர்களுக்கும் வீரவணக்கங்கள், இந்தியா எந்த தீவிரவாத மிரட்டலுக்கும் அஞ்சாது, எந்த காஷ்மீருக்கா இயக்கம் நடத்தி இந்த படுபாதகங்களை செய்தார்களோ அந்த காஷ்மீரிலே அதிரடியாக தன் பலத்தை காட்டிவிட்டு எதிரிகளுக்கு சவால் விட்டு நிற்கின்றது இத்தேசம்
மும்பையில் இறந்த தியாகிகளும் காஷ்மீருக்காக இறந்த இந்தியர்களே
பாரதம் ஒருநாளும் வீழாது, அற்ப தீவிரவாதிகளும் அவர்களின் கோழைதனமான தாக்குதலும் ஒருகாலமும் வெற்றிபெற இத்தேசம் அனுமதிக்காது
வந்தே மாதரம்.. ஜெய்ஹிந்த்