முஷாரப்புக்கு தூக்கு தண்டனை விதிக்கபட்டிருக்கின்றது
முஷாரப்புக்கு தூக்கு தண்டனை விதிக்கபட்டிருக்கின்றது
பாகிஸ்தான் ஒரு வித்தியாசமான நாடு, அங்கு இரும்பு தலைவன் என யாருமே வரமுடியாது, யார் எப்பொழுது ஆளுவார்கள் எப்பொழுது மாளுவார்கள் என அவர்களுக்கே தெரியாது
நவாஸை விரட்டிவிட்டு வந்தார் முஷாரப், கார்கில் போரின் சூத்திரதாரி அன்னார்தான். வாஜ்பாய் காலத்தில் பெரும் அரசியல்வாதியாக இருந்தார்
காலங்கள் மாறின, காட்சிகளும் மாறின. ஆப்கனில் இருந்து வந்த தாலிபன் கோஷ்டி முஷாராப்பையும் பெனசிரையும் கொலைவெறியில் தேடின
காரணம் 2001க்கு பின்பு ஆப்கன் மேல் பாகிஸ்தான் காட்டிய இறுக்கம், அப்பொழுது ஆண்டவர் முஷாரப்
நவாசுக்கு எதிராக கலகம் செய்தார் என்ற வழக்கில் இப்பொழுது மரணதண்டனை பெற்றிருக்கின்றார், இது எங்கோ எழுதபட்ட தீர்ப்பு
பூட்டோவுக்கு பின் தூக்கிலிடபடும் அதிபராகின்றார் முஷாரப்
பாகிஸ்தான் பைத்தியகார நாடுதான் ஆனால் அதன் சட்டங்கள் கடுமையானவை. இங்கே கிளம்புவது போல் அங்கே தேசவிரோத ஊர்வலம் நடந்தால் ஒரே சுடு தான்
முஷாரப் பாகிஸ்தானின் சர்வாதிகாரியாக இருந்தவர், எல்லா சர்வாதிகாரியும் எப்படி முடிந்தார்களோ அப்படியே முடிய தயராகின்றார்
