மென்மேலும் ஆசீர்வதிக்கட்டும்
நமக்கு திமுக மேல் எப்பொழுதும் ஒரு அனுதாபம் உண்டு. அதன் சில கருத்துக்களும் சர்ச்சைகளும் சிக்கலே தவிர அவர்களின் பல திட்டங்கள் அருமையானவை
அண்ணாவும் கலைஞரும் தமிழ்நாட்டின் பெரும் பிம்பங்கள், எக்காலமும் அவர்களின் கருத்துக்கள் இந்தியா இருக்குமளவும் இங்கு எதிரொலிக்கும், காலத்துக்கும் அந்த குரல் தேவை
இதனால் திமுகவினை ஓரக்கண்ணால் அடிக்கடி பார்த்துகொள்வதுண்டு
நாம் இணையத்தில் வலம் வருபவர்கள் என்றாலும் , இணையம் மாபெரும் ஊடகம் என்பதாலும் இங்கும் திமுகவின் அடையாளங்கள் எப்படி இருக்கின்றது என நோக்குவதுண்டு
திமுகவின் இணையதள பொறுப்பாளர் M.m. Abdulla என்வரே இங்கு திமுகவின் முகம்
ஒருவகையில் மிக முதிர்ச்சியான மனிதர் அவர், அண்ணாவுக்கு இருந்த பக்குவம் அவரிடமும் இருக்கின்றது
திமுகவின் கருத்துக்களை மிக தெளிவாக அதே நேரம் மிக தெளிவாக உறுதியாக சொல்லிவிடுவார்
எதை வம்புக்கு பேசகூடாதோ அதை தொடவும் மாட்டார்.
நாம் ஆல்ரவுண்டர், எப்பொழுது யாரை போற்றுவோம் அப்படியே யாரை தூற்றுவோம் என்பது எமக்கே தெரியாது
ஆனாலும் நாம் கேட்கும் நியாயமான கேள்விகளுக்கு நியாயமான பதிலை வழங்குவார். எது பொருத்தமற்றதோ அதை அமைதியாக கடந்து செல்வார்
எமக்கு நன்றாக தெரியும், சில இடங்களில் நாம் கடுமையாக தாக்கிவிடுகின்றோம் எம்மை விரட்டவோ இல்லை கருப்பு பட்டியலில் இடவோ அவருக்கு அதிக நேரம் ஆகாது
ஆனால் நாம் ஆத்திரத்தில் திட்டிவிட்டு சாகவாசமாக சங்கடபடும் பொழுது அவரோ
மிக இயல்பாக தொடர்ந்து வருவார்
இவன் எப்படி எல்லாம் எழுதினான்? எப்படி எல்லாம் ஆர்பரித்து கொட்டினான் என்ற எண்ணமே அவரிடம் இருக்காது
இது எல்லாருக்கும் வாய்க்காது, மிக அபூர்வமான குணம் அது. பொது வாழ்க்கைக்கு அவசியம் தேவை
நிச்சயம் திமுக தலமை மிக சரியான நபரை சர்ச்சையும் வம்புமிக்க இணைய தளத்தில் பொறுப்பாக நியமித்திருக்கின்றது
நான் கட்சி பொறுப்பாளன் என்ற மமதையோ, எம்மை தவிர யாருக்கும் திமுக பற்றி தெரியாது எனும் அழிச்சாட்டியமோ அவரிடம் இல்லை
ஒரு மாபெரும் கட்சிக்கு தூணாக இருப்பர் ஒருவர் நம்முடனும் இயல்பான நண்பராக இருப்பது என்பது பெருமைக்குரிய விஷயம்
எவ்வளவோ திமுக பற்றி பேசியிருக்கின்றேன், கடுமையாக சாடியிருக்கின்றேன், ஆனால் அவரோ அவர் இயல்பிலே இருக்கின்றார்
ஒருமுறை நானே மனம் வருந்தி கேட்டுவிட்டேன், “அய்யா என்மேல் கோபமே இல்லையா?”
மனிதர் மெதுவாக சொன்னார், “நாங்கெல்லாம் அண்ணா, கலைஞர் வழியண்ணே, நன்றி என்றால் மறக்கமாட்டோம் யாரும் அவமானபடுத்தினாலும் கலங்கமாட்டோம் அதை உடனே மறந்தும்விடுவோம்
திமுக என்பது உங்கள் உரிமைக்காகவும் போராடும் கட்சி என்பதை நீங்கள் மறுக்க முடியுமா?”
அப்படியே அடித்து போட்டது போலிருந்தது, மனிதர் அண்ணாவினை அப்படியே படித்து கலைஞரில் வடித்து வளர்ந்திருக்கின்றார்
கருத்தில் நேர்மை , கட்சி கொள்கையில் அபார நம்பிக்கை, தன் வாதங்களை மிக தீர்க்கமாக வைக்கும் உறுதி அதில் யாரையும் துளியும் காயபடுத்திவிட கூடாது என வலுவான கவனம் என அவரின் நல்ல குணங்களை அடுக்கிகொண்டே செல்லலாம்.
மிக நுட்பமான வாசிப்பாளரும் கூட, தேடி தேடி வாசிப்பதில் அவருக்கு அலாதிபிரியம். திமுக போன்ற கட்சிக்காரருக்கு இருக்கவேண்டிய குணம் அது
அவர் திமுகவின் வேரும் தூணுமாய் இருந்தாலும் மாற்று கட்சியினரை மதித்து பழகும் பாங்கும், துளியும் அரசியல் வெறுப்பின்றி அரசியலை கடந்து அவர்களை பக்குவமாய் அரவணைத்து நட்பாக கலந்து செல்வதிலும் தன்னிகரற்ற பயிற்சி அவரிடம் இருக்கின்றது
அவருக்கு நேற்று பிறந்த நாள்
புதுக்கோட்டை மக்கள் பெருந்தன்மைக்கு பெயர் பெற்றவர்கள் என்பது அவர்கள் மன்னர்காலத்து வரலாறு
இந்தியாவுக்கே பல இடங்களில் அவர்கள் வழிகாட்டியிருப்பார்கள்
அந்த புதுகோட்டை மண்ணிலிருந்து வந்தவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
வல்ல இறைவன் எல்லா நலன்களையும் கொட்டி அவரை மென்மேலும் ஆசீர்வதிக்கட்டும்
அவர் பணி மென்மேலும் சிறக்கட்டும், அவர் மனம் விரும்பியதெல்லாம் நடக்கட்டும்
