மேடைகளில் வாள் எந்துவது எதற்காக?

எலுமிச்சை வைத்தது தவறென்றால் மூட நம்பிக்கை என்றால் மேடைகளில் வாள் எந்துவது எதற்காக?

ஊரெல்லாம் தலைவெட்ட போகின்றோம் என்ற அர்த்தத்திலா? வாக்களிக்காதவனுக்கு எதற்கு விரல் என்ற மிரட்டலுக்கா?

எதிர் கூட்டணியினை வெட்டுவோம், தேர்தல் கமிஷனை துண்டு துண்டாக்குவோம் என்ற மிரட்டலா?

இல்லை அல்லவா?

அங்கே என்ன அலெக்ஸாண்டரும், நெப்போலியனுமா படை எடுத்து வருகின்றார்கள் இவர்கள் வாளேந்தி நிற்பதற்கு?

பின் ஏன் வாள் ஏந்தி நிற்கின்றார்கள்? மூட நம்பிக்கையா? இல்லை, மாறாக ஒரு சம்பிரதாயம் அல்லவா?

வாள் ஏந்துவது மட்டும் சம்பிரதாயம் அது மூட நம்பிக்கை இல்லை, ஆனால் எலுமிச்சையும் தேங்காயும் ஏந்தினால் மூட நம்பிக்கையா?