மைக்கேல் ஜாக்சன்

அது தெருவோரமாக ஆடிகொண்டிருந்த கருப்பர் இசை குடும்பம், அந்த குடும்பத்தின் 7ம் பிள்ளை ஜாக்சன்

அந்த சகோதரர்கள் நடத்திய இசைகுழுவில் நடனமாடி தன் வாழ்வினை தொடக்கினார் அவர்

மின்னல் வேக அசைவுகளும் , சவால் நிறைந்த ஆட்டங்களும் அவருக்கு தனி புகழ் தேடிகொடுத்தன‌

பாடல் எழுதி, அதற்கு இசையமைத்து, பாடலுக்கு ஏற்றாற் போல் நடனம் ஆடுவது, இடை இடையே நடிப்பு என அனைத்தும் கலந்த ‘பாப்’ புதிய நடனத்தை அவர் படைத்தார்

சொந்தமாக பாடல், இசை என பின்னி எடுத்தாலும் அமெரிக்கா அவரை பெரிதும் கண்டுகொள்ளவில்லை

ஒரே காரணம் கருப்பு முகம்

இதனாலே மனம் நொந்த ஜாக்சன் தன் முகத்தை பலமுறை சீரமைத்து வெள்ளை ஆக விரும்பினார். ஓரளவு நிறமும் அடைந்தார்

அதன் பின்பே அவர் உச்சம் தொட்டார், அமெரிக்கா கொண்டாடியதை தொடர்ந்து உலகமே அவரை கொண்டாடி தீர்த்தது

நடன குழு அமைத்து அவர் சம்பாதித்தது போல இன்னொருவன் சம்பாதிக்க முடியாது, அப்படி உலகம் கொட்டி கொடுத்தது

அதே நேரம் அவர் ஆடிய ஆட்டத்தையும் இன்னொருவன் ஆடமுடியாது

பெரும் செல்வம் சேர்த்த ஜாக்சன் அதை பல சமூக பணிகளுக்கே வழங்கினார், அள்ளி கொடுத்தார்

பின்னாளில் சிறுவர்களை பாலியல் கொடுமை செய்ததாக வழக்கு தொடுக்கபட்டது, அவர் குற்றமற்றவர் என வெளிவந்தார்

எனினும் அவரின் நிம்மதி பறிபோயிற்று, மனதால் நொந்த அவர் போதை பழக்கத்தில் வீழ்ந்தார் அது உயிரையும் பறித்தது

அவர் அளவு நிறத்தால் அவமானம் அடைந்தவர் யாருமில்லை, அதை தன் திறமையால் மாற்ற முயன்றாலும் முகத்தை நிறப்படுத்தும் அளவு அவர் போராடினார்

இந்த அவமானம் அவர் சாகும்வரை அவர் மனதில் இருந்தது, திறமையினை அங்கீகரிக்காமல் பிறப்பால் ஒருவனை சுட்டிகாட்டி கொல்வது மனதால் சாகடிக்கும்

அந்த அற்புத கலைஞனும் அப்படி நொந்தே செத்தான், உலகம் அவனை கொண்டாடினாலும் அமெரிக்காவில் அவன் மீது வெள்ளை இனத்திற்கு உள்ளூர ஒரு வெறுப்பு இருந்தது

ஜாக்கசனின் வீழ்ச்சிக்கும் மரணத்திற்கும் இதுவே காரணம்

லுத்தர் கிங்க்குக்கும், முகமது அலிக்கும், டைசனுக்கு நடந்த அந்த கொடுமை ஜாக்சனுக்கும் உள்ளூர நடந்தது.

உலகை தன் இசையாலும், வரிகளாலும், யாரும் பரீசிலிக்காத நடன அசைவுகளாலும் கட்டிபோட்டு பெரும் நட்சத்திரமாய் மின்னிய அந்த ஜாக்சனுக்கு இன்று நினைவு நாள்

கருப்பன் எனும் அடையாளத்தை பிளாஸ்டிக் சர்ஜரி முகத்தால் தாண்டித்தான் அவனால் வெல்ல முடிந்தது என்பது எந்நாளும் அமெரிக்க இனவெறிக்கு சான்று

கருப்பன் என்பதற்காக அவன்பட்ட அவமானம் கொஞ்சமல்ல, உடலை மறைத்த அவனால் முகத்தை மறைக்கமுடியவில்லை. ஓரளவேனும் முகம் வெள்ளையாக தெரிந்தால் தவிர தனக்கு அங்கீகாரம் கிடைக்காது என ஏங்கினான்

அமெரிக்க இனகொடுமை அப்படி இருந்தது

அந்த கொடுமையே அவன் முகத்தை அவன் அடிக்கடி உரித்து கொஞ்சமேனும் வெள்ளையாக முயற்சித்தான். அவன் நடனமும் இசையும் அற்புதமாக இருந்தும், அங்கீகரிக்க வேண்டிய சமூகம் நோக்கியது அவன் நிறத்தைத்தான்

அவன் அதனை செய்தாக வேண்டிய கட்டாயத்திற்கு வந்தான். அவன் முகம் மாற தொடங்கியபின்புதான் அவனுக்கான அங்கீகாரம் கிடைத்தது. அதை தக்க வைக்க தொடர்ந்து முகத்தை ஏதோ செய்துகொண்டிருந்தான்

கிட்டதட்ட 24 முறை முக சர்ஜரி செய்ததாக அவன் வாழ்வு சொல்கின்றது.

இசை உலகிலும் நடன உலகிலும் பெரும் தாக்கத்தை மொழி இனம் நாடு கண்டம் தாண்டி ஏற்படுத்தியவன் ஜாக்சன்

ஒவ்வொரு நிமிடமும் உலகின் ஏதாவது ஒரு மூலையில் ஜாக்சனின் பாணியில் நடனம் ஆடபட்டு கொண்டே இருக்கின்றது

நமது ஊர் பிரபுதேவா போல உலகெல்லாம் அவர் வழியில் நடன‌ங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன‌

அதில் எல்லாம் ஜாக்சன் வாழ்ந்துகொண்டே இருப்பார்.

தமிழகத்தில் மைக்கேல் ஜாக்சனின் நடன அசைவுகளை அவர் போலவே கொடுக்க முடியுமென்றால் சின்ன தலைவி சாய் பல்லவியினை சொல்லலாம்

ஜாக்சன் போலவே மிக அபாரமான நடனதிறமை அவருக்கு உண்டு

ஏன்? ஜாக்சனிடம் இல்லா நளினமும் அவரிடம் உண்டு.

ஆனால் அதை பார்க்க ஜாக்சனுக்கு கொடுத்து வைக்கவில்லை என்பதுதான் சோகம்..