மொழியும் மதமும் ஒரு இனத்தின் அடையாளம்

சீனாவில் ஏகபட்ட மொழிகள் உண்டு, மாண்டரின் போக ஹாக்கியான் கேன்டனிஸ் என இன்னபிற மொழிகள் உண்டு

ஆனால் பெரும்பான்மை மக்கள் பேசும் மொழியான மாண்டரின் ஆட்சிமொழி

ஸ்பெயினில் ஸ்பானிஷ் மொழி போக பாஸ்க் உட்பட பலமொழிகள் உண்டு, பாஸ்க் மொழிக்கு ஈழபோராட்டம் போல போராட்டமே நடந்தது, அங்கு ஸ்பானிஷ் ஆட்சி மொழி

மலேஷியாவில் பெரும்பான்மை மக்களின் மலாய் ஆட்சி மொழி, தமிழரும் அதை படித்து தீரவேண்டும், ஆனால் தமிழ் தமிழ்நாட்டை விட நன்றாய் வாழ்கின்றது

இலங்கையில் சிங்களம் ஆட்சிமொழி, அங்கு தனிதமிழீழம் என்பது தமிழக திராவிட அரசியலால் கெடுக்கபட்டது

உலகை உற்று பார்க்கின்றோம், எல்லா நாட்டிலும் பலமொழி பேசும் மக்கள் இருந்தாலும் பெரும்பான்மை மொழியினை ஆட்சிமொழி ஆக்குகின்றார்கள்

அப்படியே பெரும்பான்மை மதத்தை அரசுமதமாகவும் அறிவிக்கின்றார்கள்

அருமை இந்தியாவில் இரண்டுக்குமே வாய்ப்பில்லை, காரணம் இங்கு யாரும் தங்களை இந்தியராகவும் எண்ணவில்லை இந்துவாகவும் எண்ணவில்லை

சரி இந்தியாவினை விடுங்கள், தமிழ்நாட்டின் மதம் என்னவாக இருக்கமுடியும்?

மொழி உண்டு ஆனால் மதமில்லை என்பதெல்லாம் எவ்வகை ஏமாற்றுவேலை?

இதை எல்லாம் சொன்னால் நாம் சங்கி

மொழியும் மதமும் ஒரு இனத்தின் அடையாளம்

மொழியினையும் ஏற்கமாட்டோம் மதத்தையும் ஏற்கமாட்டோம் என கோவில்மாடு போல தலையாட்டுபவன் நாட்டு குடிமகனாகவும் இருக்கமுடியாது, தன் இனத்தில் ஒருவனாகவும் இருக்கமுடியாது

அவன் அறிவுகெட்ட காட்டு மிராண்டியபயலாக இருப்பது ஒன்றே சாத்தியம்..