மோடிகாலத்தில் பணதட்டுபாடு
அட காமராஜர் காலத்தில் அரிசி தட்டுப்பாடு என்றும் இந்திரா காலத்தில் ஜனநாயகத்துக்கு தட்டுபாடு என இன்னும் எப்படி எல்லாமோ ஒப்பாரி வைத்த கட்சிதான் அது
இப்பொழுதும் மோடிகாலத்தில் பணதட்டுபாடு அது இது என கிளம்பிவிட்டார்கள்
சரி இந்த பொருளாதார நெருக்கடி என அவர்கள் சொல்லும் காலத்திலும் அவர்கள் டிவி சாம்ராஜ்யம் இயங்குகின்றது, அங்கு சிக்கல் வந்ததாக தகவல் இல்லை
பொருளாதார நெருக்கடி என எந்த மீடியா, டிவியாவது ஆட்குறைப்பு செய்ததா?
அறிவாலயத்தில் சம்பளம் கொடுக்க வழியின்றி ஊழியர் குறைக்கபட்டார்களா?
இல்லை
அவர்களின் பினாமி நிறுவணங்கள் எல்லாம் அதே லாபத்துடன் இயங்குகின்றது பள்ளி கல்லூரிகள் உட்பட
அட அவர்கள் ஏதோ பவளவிழா மாநாட்டை கூட மிகுந்த செலவில் நடத்திகொண்டிருக்கின்றார்கள்
ஊரெல்லாம் மாநாடு, திக்கெங்குங்கும் தலைவனின் சிலைகள்
இந்தியா முழுக்க தொழில் முடக்கமாம், இவர்கள் தொழில் மட்டும் லாபமாம் அதில் ஏகபட்ட செலவாம், பெரும் செலவு செய்து மாநாடு நடத்துவார்களாம்
பொருளாதார நெருக்கடியில் மக்கள் சிக்கி திணறும்பொழுது இவர்களுக்கு மட்டும் கோடிகணக்கான பணம் எப்படி வரும்?
ஏதாவது புரியுமா புரியாது…
இனி இடைதேர்தலில் நாங்குநேரி வானியம்பாடியில் எப்படி அள்ளி இறைக்க போகின்றார்கள் என்பதை பாருங்கள்
அப்பொழுது பொருளாதார நெருக்கடி, தொழில் முடக்கம் பண தட்டுப்பாடு என எவனாவது வாய் திறக்கட்டும் , அப்பொழுது பார்த்துகொள்ளலாம்.
நாடு நன்றாக இருக்கின்றது என சொல்லும் ஒரே கட்சி அதிமுக
அவர்கள் போக்கில் 2 கோடி மதிப்புள்ள பேருந்தை இயக்குகின்றார்கள், இன்னும் எவ்வளவோ செய்கின்றார்கள்
பணபுழக்கம் இல்லாமல் இது எப்படி என அவர்கள் கேட்கும் கேள்விக்கு பதிலே இல்லை..