மோடியின் சில அறிவிப்பு

மோடியின் சில அறிவிப்புகளும் பேச்சுக்களும் கவனம் பெறுகின்றன‌

மாநில அரசுகளை இதுவரை பெரிதும் குறிப்பிட்டு சொல்லாத மோடி தமிழகம் உள்ளிட்ட அரசுகள் சில வரிகளை குறைக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார், இம்மாநில மக்களிடம் மத்திய அரசு மேல் மாநில கட்சியினரும் ஆட்சியினரும் போடும் பழியினை துடைக்க அவர் களமிறங்கிவிட்டார்

இதெல்லாம் தமிழகம் போன்ற மாகாணங்களுக்கு புதிது

இதுவரை இங்கு மத்திய அரசை மோசமாக அது தமிழக விரோத காரியங்களை செய்வதாக சித்தரித்தே மாகாண அரசியல் நடந்தது, தேசிய கட்சிகளும் அதன் பிரதமர்களும் இதை கண்டுகொள்வதில்லை

இந்த ஆபத்தின் வீரியத்தை உணர்ந்து முதல் முறையாக மாநில அரசுகளை தொடுகின்றார் மோடி

அப்படியே பிஜி தீவில் சில நலதிட்டங்களை இந்தியா சில தொண்டு நிறுவணங்கள் மூலம் மேற்கொள்கின்றது, அதில் மருத்துவ உதவிகளும் அதிகம்

அந்த மருத்துவமனையினை காணொளி வாயிலாக திறந்துவைத்த மோடி உலகெல்லாம் 150 நாடுகளுக்கு இந்தியா கொரோனா காலத்தில் மருந்து கொடுத்திருக்கின்றது என இந்தியாவின் சாதனையினை உலக மானுட நேயத்தை எடுத்துரைத்தார்

பிஜி தீவில் இந்தியாவின் கரங்கள் ஓங்குவது சீனாவினை கட்டுபடுத்தும் முயற்சி என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை, மோடியின் அசைவு ஒவ்வொன்றும் நாட்டின் நலத்தையும் அதன் காவலையுமே உறுதி செய்யும் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை