மோடியின் வெளிநாடு சுற்றுப்பயண செலவு 1484 கோடி

மோடியின் வெளிநாடு சுற்றுப்பயண செலவு இதுநாள்வரை 1484 கோடி : செய்தி

இது விமான செலவு மட்டுமா என்றால் இல்லை, பிரத்யோக சமையலர்கள், பாதுகாவல் மகா முக்கியமாக உடைகள் என எல்லா விஷயங்களும் கலந்த செலவு

காமராஜர் என்றொருவர் முன்பு இருந்தார், அவர் மிக சில நாடுகளுக்கே சென்றிருக்கின்றார், அப்படி சோவியத் ரஷ்யாவிற்கு பயணமானார்

ஏன் காமராஜர் செல்கின்றார் என கேட்டார்கள், “நான் ஊர் சுற்ற போகலைண்ணேன், உல்லாச பயணம் போகலைண்ணென்.

பொதுவுடமை அரசு எப்படி மக்களுக்கு உழைக்கிறதுன்னு பாக்க போறேண்ணேன், அங்கே இருக்கும் விவசாயிகளையும் தொழிலாளர்களையும் அந்த அரசு எப்படி நல்லவிதமா பாதுகாக்குதுண்ணு நேரில் சென்று பார்ப்பதில் என்ன தப்புண்ணேன்?”

அந்த காமராஜர் செல்லும் பொழுது ரஷ்ய குளிருக்காக ஆடை தைக்கவில்லை, காலில் ஷூ அணியவில்லை

குளிருக்கு பெயர் போன ரஷ்யாவில் கதர் சட்டையும் வேட்டியும் காலில் ரப்பர் செருப்புமாக உலவிய காமராஜரை ரஷ்யர்கள் வினோதமாக பார்த்தனர், அவர் யார் என கண்டுகொண்ட ரஷ்ய அரசு அவரின் எளிமையினை கண்டு வணங்கி நின்றது

லால் பகதூர் சாஸ்திரி காஷ்மீர் செல்லும்பொழுது நேருவிடம் குளிர் ஆடை வாங்கிய சம்பவங்களும் உண்டு, காரணம் வறுமை

அப்படிபட்ட தலைவர்கள் வாழ்ந்த நாட்டில்தான் மோடி இத்தனை ஆயிரம் கோடி செலவழித்துவிட்டு நான் ஏழைதாயின் மகன் என நீலிக்கண்ணீர் வடிக்கின்றார்