மோடி அமெரிக்க எதிர்ப்புக்கு பணிந்தாரா
மோடி அமெரிக்க எதிர்ப்புக்கு பணிந்தார் என இல்லா பொய்யினை சொல்லிகொண்டிருகின்றன காங்கிரஸ் கோஷ்டி, மோடி இந்தியாவில் கொரோனா கட்டுபட்ட நிலையில் , அமெரிக்கா மருந்துக்கு அல்லாடும் நிலையில், மிக பாதுகாப்பான தயாரிப்பு எனும் வகையில் இந்தியாவிடம் மருந்து கேட்கின்றது
இந்தியாவின் மக்கள் தொகை அமெரிக்காவினை விட 4 மடங்கு அதிகம், இதனால் மருந்தும் பாதுகாப்பு வசதிகளும் 4 மடங்கு அதிகம் இருத்தல் வேண்டும், இதனால் இந்தியா அசுரவேகத்தில் தன் மருத்துவ உற்பத்தியினை பெருக்குகின்றது எனினும் உலக சுகாதார அமைப்பு கேட்டு கொண்டதால் கொஞ்சம் மருந்தினை அமெரிக்காவுக்கு கொடுக்க சம்மதித்தது
இது மனிதாபிமான உதவி, இதற்குத்தான் குதிக்கின்றார்கள் மோடி எதிர்ப்பாளர்கள்
இவர்களுக்கு நாமும் பி.எல் 480 என அமெரிக்காவுக்கு இந்தியா மண்டியிட்ட கதையினை சொல்லியாக வேண்டும்
அது கென்னடி காலம் உலகை மிரட்டிய கென்னடி , அமைதிக்கு உணவு என்றொரு திட்டம் கொண்டுவது பொது சட்டம் 480 என சொல்லி உலகின் பல நாடுகளை பணிய வைத்தார்
அவர் 1963ல் இறந்தாலும் அந்த அற்புத திட்டத்தை அமெரிக்கா உலகெல்லாம் திணித்தது, குறிப்பாக 1965 போரில் வெற்றிபெற்றிருந்த இந்தியா மேல் வலிய திணித்தது
சதாமுக்கு உணவுக்கு எண்ணெய் என முடக்கினார்கள் அல்லவா அப்படி அமைதிக்கு உணவு என பெயர்
இந்திரா அதை ஏற்க முன்வந்தார், அத்தோடு டாலர் மதிப்பினை சில ரூபாய்கள் வலிய குறைக்கவும் முன்வந்தார்
காமராஜர் எனும் மகா அற்புத தேசபக்தன் கதறினான் “கொஞ்சம் கோதுமைக்காக நாட்டின் தன்மானத்தை அடகு வைத்து நம் கைகளை கட்டி நிற்பதை விட ஒருவேளை பட்டிணி கிடந்து தேசம் காப்போம்” என கெஞ்சினான்
நேருவின் மகளே, பணமதிப்பை குறைக்காதே கச்சா எண்ணெய்க்கு பணம் அள்ளிகொடுக்க வேண்டும், சூது தெரியாமல் சிக்காதே என அவன் அலறியது இந்திராவின் காதில் விழவில்லை
அன்று காங்கிரஸில் சி.ஐ.ஏ உளவாளிகள் இருந்து இயக்குவதாக ரஷ்யா சொன்னது, ஆம் காங்கிரஸ்காரர்களுக்கு அமெரிக்க தொடர்பும் வெளிநாட்டு சொத்துக்களும் குவிந்தன. அவை இந்தியாவினை அமெரிக்காவுக்கு விற்று கொண்டிருந்தன
ஆனால் கட்டிய வேட்டி மட்டும் சொத்து என இருந்த காமராஜருக்கு அதெல்லாம் அவசியமில்லை என்பதால் அவர் உறுதியாக இருந்தார்
விளைவு காங்கிரசார் அவரையே விரட்டி அடித்தனர்
என்று இந்திரா பி.எல் 480 சட்டத்தை ஏற்றாரோ , என்று இந்தியாவின் பண மதிப்பினை வலிய குறைத்தாரோ அன்று தொடங்கியது இந்திய சரிவு
இந்திரா கடைசி வரை மர்மமான நபராகவே இருந்தார், வங்கபோரில் பாகிஸ்தான் மண்டியிட்டும் அவர் காஷ்மீரை மீட்காத ரகசியம் இன்றுவரை யாருக்க்கும் புரியவில்லை
இந்திராவின் பி.எல் 480 சட்டத்தின் தொடர்ச்சிதான் மன்மோகன் சிங் எற்ற தாரளமயமாக்கல் அதை ஒட்டி வந்ததுதான் இந்தியாவின் போலி பொருளாதாரமும் ஒரு மாதிரி வீக்கமும்
ஆக நாட்டை விற்றதில் மகா முக்கிய பங்கு காங்கிரசுக்குத்தான் வரலாறேங்கும் கிடக்கின்றது
பணத்துக்காக எட்டப்பனை போல குனியும் கோஷ்டிகள் “மோடி நாட்டு பொருளாதாரத்தை கெடுத்தார்” என்கின்றன, அவை சொல்ல வருவது இந்திரா, மன்மோகன் போல தேசத்தை மோடி விற்றால் என்ன என்பதே..
நாட்டை விற்று உண்ண அவர்களுக்கு அவ்வளவு ஆசை..
மோடி மகா தைரியமாக நாட்டு நலனுக்கான நடவடிக்கையினை எடுக்கின்றார். இந்திரா போல மன்மோகன் போல மண்டியிட்டு பொருளாதாரம் வளர்க்க அவர் தயாராக இல்லை
அவர் காமராஜரின் வாரிசு “ஒருவேளை பட்டினி கிடந்தும் நாட்டை காப்போம்” எனும் அந்த முழக்கத்தின் வாரிசு, அதனால்தான் பொருளாதாரம் பாதித்தாலும் நாட்டின் நலன் முக்கியம் என நிற்க்ன்றார்
ஆம், காமராஜர் இன்றிருந்தால் நிச்சயம் மோடியினை தன் அரசியல் வாரிசாகவே அறிவித்திருப்பார்.
நாம் எந்த கட்சியும் இயக்கமும் அல்ல, அப்படி ஒரு ஆசையும் நமக்கு இல்லை
இந்நாட்டின் வரலாற்றை படித்து, உலக நிலையினை நோக்கி இந்நாட்டை அதில் பொருத்தி , பழைய அரசுகளிலும் இப்போதுள்ள உலக அரசுகளுடனும் இந்த அரசை ஒப்பிட்டு பார்ப்போம் அவ்வளவுதான்
அதில் மோடி அப்படியே காமராஜரின் வழியில் நடக்கின்றார், அதை எம்மால் உறுதியாக எப்பொழுதும் எங்கும் சொல்லமுடியும்