மோடி அரசு அதில் சறுக்குகின்றது
நம் எல்லோருக்கும் நாடுதான் முக்கியம், நிச்சயம் அதுதான் முக்கியம்
ஆனால் இந்த அரசு செய்யும் பல விஷயங்கள் சரியாக படவில்லை, ஒருமாதிரி செல்கின்றார்கள்.
ஆட்சி அவர்கள் கையில் கிடைத்துவிட்டால் இந்நாட்டை என்னவும் செய்யலாம் என நினைத்துவிட்டார்கள் போல..
சமஸ்கிருதம் என்பதை மிக உன்னத மொழி போல கொண்டாட தொட்ங்கியிருப்தெல்லாம் சரியானதல்ல
சமஸ்கிருதம் என்பதெல்லாம் மூத்த மொழி அல்ல, ஏதோ அரசு காரியங்களுக்கான ரகசிய மொழியாக பாவிக்கபட்டு பின் கடவுள் மொழியாக மாறி என்னவோ ஆகிவிட்டது
ஒரு காலத்தில் இலத்தீன் மொழி இன்று வழக்கொழிந்துவிட்டது அதை மீட்டு மறுபடி ஆதிக்கம் செலுத்த பொகின்றோம் என்பதெல்லாம் அபத்தம்
அப்படி சமஸ்கிருதத்தை பழைய நிலைக்கு கொண்டு வரப்போகின்றொம் என்பதெல்லாம் நடைமுறைக்கு ஆகாது
சமஸ்கிருதத்தை தமிழின் மூத்தமொழி என்பதை எல்லாம் ஏற்றுகொள்வது என்பதெல்லாம் ஏற்றுகொள்ளமுடியா விஷயம்
இந்த புதிய கல்வி கொள்கை என்பது கூட சரியல்ல, மாநில கல்வி உரிமையினை அது பறிக்கின்றது. உயர்கல்வியில் வைக்க வேண்டிய விஷயங்களை ஆரம்ப கல்வியிலே வைப்பது சரியல்ல
இது மாநில கல்வியினை அழிகின்றது, கலாச்சாரமாக தொடர்ந்துவரும் விஷயங்களை அழிக்கின்றது இன்னும் எல்லாவற்றையும் அழிக்கின்றது
இது ஏற்புடையதல்ல
இந்நாடு என்பது நமக்கு முக்கியமானது, ஆனால் தமிழ் கலாச்சாரத்தையும் கல்வியினையும் அழிப்பது என்பதை ஏற்க முடியாது
அந்த கல்வி கொள்கைபடி நாம் கற்ற திருகுறளையும் இன்னும் பல பண்டைய அடையாளங்களையும் வரும் தலைமுறை கற்க முடியாது
அது அறிவுகெட்ட தலைமுறையாகிவிடும் ராஜராஜ சோழனின் தஞ்சாவூர் பற்றியும் அந்த ஆலயமும் பற்றியும் கூட தெரியாத பிராய்லர் கோழி ஆகிவிடும்
வரவர இந்த மோடி அரசின் அழிச்சாட்டியம் தாளமுடியவில்லை
சமஸ்கிருதத்தை கொண்டாடுவதும் , மாநில கல்வி உரிமைகளில் கைவைப்பதும் சரியானதல்ல
உயர்கல்வியில் எதையும் செய்யட்டும் ஆனால் பிஞ்சு கல்வியில் சில விஷயங்களில் கை வைப்பதை ஏற்க முடியாயாது
இப்படியே இவர்கள் செய்துகொண்டிருந்தால் வேறு என்ன செய்ய முடியும்?
அறிவாலயம் நோக்கி நடக்க வேன்டியதுதான்..
மிசாவுக்கு பின்னரான இந்திரா காந்தி திருந்தியிருந்தார்
ஒவ்வொரு திட்டத்தின் பொழுதும் மாநில மக்களின் உணர்வு எப்படி இருக்கும் என்பதில் கண்ணும் கருத்துமாயிருந்தார்
அதுதான் அவரின் வெற்றி
மோடி அரசு அதில் சறுக்குகின்றது, மாநில கலாச்சாரத்துக்கும் நலமுக்கும் எதிரான விஷயங்களில் அது இறங்கினால் அது தீரா குழப்பத்தில் இட்டு செல்லும்