மோடி ஆட்சி காட்டாட்சி என்றெல்லாம் சிலர் கிளம்பியிருக்கின்றார்கள்

மோடி ஆட்சி காட்டாட்சி என்றெல்லாம் சிலர் கிளம்பியிருக்கின்றார்கள்

இந்திய வரலாற்றில் கொடுமையான காலம் என சஞ்சய்காந்தி மறைமுகமாக ஆண்ட காலமும், அவர் போட்ட ஆட்டமும் கொடுமையானவை

 

இந்திராவின் இறுமாப்பான மிசா எல்லாம் ஏற்றுகொள்ளும் விஷயம் அல்ல‌

ராமர் கோவிலை இன்னும் கட்டாமல் இருப்பதே அது போலி மதவாத கட்சி என்பதில் தெரிகின்றது, பாவம் அவர்களால் அதை சொல்லமுடியாது

பல வரலாறுகளை புரட்டினால் மோடி ஒன்றும் மகா மோசமான ஆட்சியினை கொடுத்துகொண்டிருக்கவில்லை


கன்னட தேர்தலில் காங்கிரஸ், பாஜக, தேவகவுடா கட்சி தவிர இன்னொரு கட்சியும் சில இடங்களில் போட்டியிடுகின்றது

அது அனைத்திந்திய அதிமுகவாம். அவர்கள் அகில இந்திய கட்சி அல்லவா? அதனால் அங்கும் போட்டி இடுகின்றார்களாம்

எங்கே? கன்னட அதிமுக காவேரி வரும் என சொல்லட்டும் பார்க்கலாம்

ஆக பாஜக, காங் வரிசையில் அதிமுகவும் காவேரி விவகாரத்தில் இரட்டை வேடமிட்டு சிக்கிகொண்டது