மோடி ஒரு நாளைக்கு 20 மணி நேரம் உழைக்கின்றார் : அமித்ஷா

பிரதமர் மோடியின் நான்காண்டு சாதனைகளை எடுத்துக் கூற ஓராண்டு போதாது: தமிழிசை பேட்டி.

ஓஹோ இந்த சாதனைகளை சொல்ல அடுத்த ஐந்து ஆண்டு ஆட்சி வேண்டுமோ?? என்னா வில்லத்தனம்


மோடி ஒரு நாளைக்கு 20 மணி நேரம் உழைக்கின்றார் : அமித்ஷா

ஹிட்லர் ஒரு நாளைக்கு 2 மணி நேரம்தான் உறங்கினான் என்கின்றது வரலாறு, விளைவு என்ன?

டெங்கி கொசு கூட 21 மணிநேரம் வேலை செய்யுமாம்


சிறுத்தை புலியினை தனியாக விரட்டி மகளை காப்பாற்றினார் நெல்லை பெண்

இதிலிருந்து என்ன தெரிகின்றது, புலியினை முறத்தால் அடித்து விரட்டிய தமிழச்சி ஒரு நெல்லைபெண் என்பது தெரிகின்றது


கலாநிதி மாறனின் சன்ரைசர்ஸ் அணி பைனலில் தோற்றது : செய்தி

இதுதான் கலைஞர் குடும்பத்து ராசி, நன்றாக ஆடிவிட்டு பைனலில் தோற்றுவிடுகின்றார்கள், அரசியலில் கூட அப்படித்தான்


பிளாஸ்டிக்கை புறக்கணியுங்கள்: நாட்டு மக்களுக்கு மோடி வேண்டுகோள்

முதலில் இவரை புறக்கணிப்போம், அதன்பின் பிளாஸ்டிக்கை புறக்கணிப்போம்

இப்பொழுது ஏன் திடீரென பிளாஸ்டிக் பக்கம் செல்கின்றார்? ஆக எவனோ ஒரு குஜராத்தி விரைவில் அலுமினிய, எவர்சில்வர், தாமிர பாத்திரம் செய்ய போவது தெரிகின்றது

ஸ்டெர்லைட் ஆலையினை விட பிளாஸ்டிக் மகா ஆபத்தாம்.