யாரை எதிர்த்து நடத்தினார்?
ஈரோட்டு ராம்சாமிஎவ்வளவு போராட்டம் நடத்தினார், உருண்டார் , புரண்டார் , தொங்கினார் என சொன்னால் அதன் உள்நோக்கம் கவனிக்கதக்கது
யாரை எதிர்த்து நடத்தினார், ?
பிராமணனை எதிர்த்து
அப்பொழுது ஆண்டுகொண்டிருந்தது யார்?
பிரிட்டிஷ்காரன்
சமூக கொடுமை இருந்ததென்றால் அதை களைய சட்டமியற்ற சொல்லவேண்டுமா இல்லை தெருவில் உருண்டு புரள வேண்டுமா?
சட்டம் இயற்ற சொல்ல வேண்டும்
சட்டம் யார் இயற்றமுடியும், அதிகாரம் யாரிடம் இருந்தது?
வெள்ளையனிடம் இருந்தது
பின் ஏன் வெள்ளையனை எதிர்க்காமல் அவனிடம் அடிமையாக இருந்த பிராமணனை எதிர்த்தார்?
அதுதான் யாருக்கும் புரியவில்லை, ராம்சாமி வெள்ளையன் அடிமையாய் இருந்தால் தவிர இப்படி பைத்தியமாய் புலம்ப வாய்ப்பே இல்லை
சதி எனும் உடன்கட்டை வழக்கம், குழந்தை திருமணம் எல்லாம் தடுக்க வெள்ளையனை சட்டமியற்ற வைத்தான் ராஜாராம் மோகன்ராய்
சட்டபடி சமூக கொடுமையினை தடுத்தான் அவன்,
ராம்சாமி ஏன் அதை செய்யவில்லை அல்லது செய்ய துணியவில்லை?
ராஜாராம் மோகன்ராய்க்கு 800 வருடங்களுக்கு முன்பே கன்னட பசவய்யா எனும் சீர்திருத்தவாதி இருந்தான்,லிங்காயத் பிரிவு அவன் தொடங்கி வைத்தது
சமூகத்தை சீர்திருத்தினான், பெண் அடிமைதனம் ஒழித்தான்இன்றும் அங்கு பெண்கள் ஆண்களுக்கு தாலிகட்டுவார்கள்
ஆனால் கடவுள் இல்லை என காட்டுமிராண்டிதனம் செய்யவில்லை , கிளைகளை செம்மைபடுத்தினாரே தவிர வேரினை வெட்டவில்லை
இன்னும் எவ்வளவோ சீர்திருத்தவாதிகள் வந்தனர், எதை செய்ய வேண்டுமோ அதை செய்தனர், குளம் கெட்டுவிட்டால் பழைய நீரை வெளியேற்றி புதுநீர் பாய்ச்சவேண்டும் , இவர்கள் அதைத்தான் செய்தார்கள்
ஈரோட்டு ராம்சாமி குளத்தை மூடி மண்மேடாக்கினான், குளத்தின் பலன்களை அவன் நினைக்கவே இல்லை
, அறிவுள்ளவன் அச்செயலை செய்வானா? அதை செய்தவன் எவ்வளவு பெரும் மூடனாக இருத்தல் வேண்டும்?
பசுவய்யா, ராஜாராம் மோகன்ராய் போன்றோருக்கு அறிவு இருந்தது, எதை செய்யவேண்டும் எதை செய்ய கூடாது எனும் தெளிவும் ஞானமும் இருந்தது
காரணம் அவர்கள் தூய இந்துவாய் நல்லறிவாளனாய் இருந்தார்கள் , உண்மையான சமூக நோக்கமும் புரட்சி மனப்பான்மையும் முற்போக்கு மனமும் அவனுக்கு இருந்தது
ஈரோட்டு ராம்சாமிக்கு வெறுப்பும் விரக்தியும் வெறுப்பும் முட்டாள்தனமுமே இருந்தது, அதனால் தெருவிலே புரண்டு அழுதான்,
எதை செய்யவேண்டுமோ அதை செய்யவில்லை கடைசி வரை வெள்ளையனை அவன் எதிர்க்கவே இல்லை மாறாக சக அடிமையாக இருந்த பிராமணன் மேல் கம்பு சுற்றுவதிலே காலம் கடத்தினான்,
இதன் பெயர்தான் சிந்தனை, புரட்சி, புண்ணாக்கு என சொல்லிகொண்டிருந்தால் அவர்கள் முரசொலி மட்டும் தொடர்ந்து படிக்கட்டும்

