யார் மேலிடம்?

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து அதிமுக மேலிடம் முடிவு செய்யும்: பன்னீர்

சரி யார் மேலிடம்?

சசிகலா அணி அதிமுகவில் இல்லை என இவர்கள் சொல்லிவிட்டார்கள், இவர்கள் அணியில் இவரும் பழனிச்சாமியும்தான் மேலிடம்

இவர்களே மேலிடம் முடிவு செய்யும் என்றால் ஆக இன்னொரு மேலிடம் இருக்கின்றது


ராமசந்திரனுக்கே நூற்றாண்டுவிழா கொண்டாடுவார்களாம், ஜெயா பிறந்த நாள் கொண்டாடுவார்களாம், அவர் சமாதியில் உருளுவார்களாம்

ஆனால் தீபாவளி கொண்டாட பகுத்தறிவு தடுக்குதாம்

நல்ல பகுத்தறிவாதிகள் என்றால் ராமசந்திரனுக்கு ஏன் நூற்றாண்டுவிழா என கேட்டுவிட்டு அல்லவா தீபாவளி பக்கம் வரவேண்டும்


அங்கிள் சைமனை எல்லாம் ஒரு ஆளாக அழைத்து, அவரை பேசவிட்டு கேட்டுகொண்டிருந்த பாண்டே என்பவர் அந்த ராமசந்திரனை பற்றி சொல்லிவிட்டதில் என்ன அதிசயம்

அங்கிள் சைமனோடு அடிக்கடி பேசிகொண்டிருந்தால் புத்தி எப்படி மழுங்கிபோகும் என்பதற்கு பெரும் உதாரணம் தந்தி டிவி பாண்டே..