யுனெஸ்கோ என்றைக்கு பெரியாரை பார்த்தது?
யுனெஸ்கோ என்றைக்கு பெரியாரை பார்த்தது?
இவர்களாக ஏதாவது எழுதிகொள்வது அதில் சம்பாதித்தும் கொள்வது..
இந்த உலகம் மிக உன்னிப்பாக பலரை கவனிக்கும் அதுவும் சோவியத் யூனியன் போன்றவை உலகம் முழுக்க மானிடநேயத்தை தேடியவர்களை உண்மையான ஏழை போராளிகளை தேடி தேடி கவுரவித்தது
சோவியத் பார்வையில் காமராஜர் தெரிந்தார், ஜெய்காந்தன் தெரிந்தார்
பெரியார் என்பவரை அந்த பாட்டாளிகளின் நாடு கண்டுகொள்ளவே இல்லை
ஏன்?
சீனா கியூபா வியட்நாம் வடகொரியா இலங்கை என உலகில் எங்கு சமத்துவ போராட்டம் வந்தாலும் ஓடிவந்து நின்ற சோவியத் யூனியன் ஏன் இந்த திக திமுகவினை ஏறேடுத்தும் பார்க்கவில்லை?
தங்கள் கம்யூனிசத்தை காப்பி அடித்து கருப்பு சட்டை போட்டு போலி நாத்திகவாதம் பேசிகொண்டு அரசியல் செய்கின்றார்களே தவிர அக்கும்பல் தமிழ்நாட்டில் ஒரு காலமும் பாட்டாளிக்கும் தொழிலாளிக்கும் ஒன்றுமே செய்யவில்லை என்பது அவர்களுக்கு தெரிந்திருந்தது
இது இந்தியாவில் அரசியல் குழப்பம் ஏற்படுத்தும் ஒரு கும்பலே அன்றி மக்கள் அபிமானமோ அவர்களுக்கான உருப்படியான சித்தாந்தமோ அவர்களிடம் இல்லை என்பதை சோவியத் உணர்ந்திருந்தது
இந்த திக கூட்டம் பிரிட்டனின் கைகூலி, பின்பு அமெரிக்காவின் கைப்பாவை என்பதும் சோவியத் அமைப்புக்கு தெரிந்தது
அது யுனெஸ்கோவக்கும் தெரிந்தது
உலகெல்லாம் இருந்து அடிதட்டு மக்களுக்காக வாழ்ந்தவர்களை கொண்டாடும் நாடுகளும் அமைப்புகளும் பெரியாரை கொஞ்சமும் கண்டுகொள்ளாமலே விட்டிருந்தன
அதுதான் உண்மையும் வரலாறும் ஆகும்
ஆனால் இவர்கள் எவ்வளவு கட்டுகதைகளை அள்ளிவிடுகின்றார்கள்?
எங்கே உண்மையான கம்யூனிசம் பேசிய நாத்திகவாதி, அடிமட்ட மக்களுக்காக பாடுபட்ட உண்மை போராளி என்றால் சோவியத் சும்மா விட்டிருக்குமா?
சோவியத் விருது கொடுத்திருந்தால் இந்த வீரமணி கும்பல் சும்மா இருந்திருக்குமா?
சோவியத் பலமாக இருந்த காலத்தில்தான் பெரியார் இருந்தார், ஆனால் கொஞ்சமும் சோவியத் பார்வை இல்லை, பெரியாரும் அதை விரும்பவில்லை ஏன்?
ஆம் அமெரிக்காவினை பகைத்துகொள்ள பெரியாரும் அவர் கூட்டமும் விரும்பவில்லை
சோவியத்தும் பெரியாரையோ அண்ணாவினையோ ஏறேடுத்தும் பார்க்கவில்லை, கலைஞரையும் அப்படியே
ஆனால் அமெரிக்கா அண்ணாவினையும் கலைஞரையும் கொண்டாடியது
ஏன் ஒரு முதலாளித்துவ நாடு ஏன் பாட்டாளி இயக்கத்தை அணைத்தது
ஒரு நாத்திக பொதுவுடமை நாடு ஏன் ஏழைகளுக்காக போராட வந்த திக திமுகவினை ஏறேடுத்தும் பார்க்கவில்லை
சிந்தியுங்கள் உண்மை உங்களுக்கு புரியும்
இந்தியாவினை நம்மைவிட கவனமாக உற்றுநோக்கிய வெளிநாட்டு சக்திகளுக்கு எது உண்மை எது போலி என நன்றாக தெரிந்திருந்தது
நமக்குத்தான் இன்னும் தெரியவே இல்லை..
