யுனெஸ்கோ தமிழ்நாட்டில் கிளை திறக்குமா?

இது என்ன கொடுமை?

யுனெஸ்கோ தமிழ்நாட்டில் கிளை திறக்குமா?

இது என்னவகை விருது என்றே தெரியவில்லை, யுனெஸ்கோ நாட்டுகொரு பிரிவு வைத்திருக்குமே தவிர ஊருக்கொன்றேல்லாம் சாத்தியமே இல்லை

அதும் மன்றம் என்ற வார்த்தை எல்லாம் வாய்ப்பே இல்லை

இன்னொன்று யுனெஸ்கோ விருது கொடுத்தால் யுனெஸ்கோ அதிகாரி இருப்பார், இந்தியாவுக்கான பிரதிநிதி இருப்பார்

இங்கு பாருங்கள், பூராவும் கருப்பு சட்டை பெயர்கள்

ஆக யுனெஸ்கோவுக்கு ஒரு ரசிகர்மன்றம் நடத்தி இவர்களாகவே கொடுத்த விருது என்பது தெரிகின்றது

பெரியாருக்கு யுனெஸ்கோ விருது கொடுத்தது என்ற சர்ச்சை ஒரு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது

உண்மையிலே அண்ணாவுக்கு யேல் பல்கலைகழகம் டாக்டர் பட்டம் கொடுத்ததா? இல்லை இவர்களே பட்டம் கொடுத்து சொல்லிகொள்கின்றார்களா?

காரணம் திராவிட கோஷ்டிகள் அவர்களுக்கு அவர்களே பட்டம் கொடுத்து மகிழ்பவர்கள் என்பதால் யேல் டாக்டர் பட்டம் பற்றி ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் உள்ளது