யூதர் மட்டும்தான் ஒழிக்கபட வேண்டுமா? வேறு ஏதும் திட்டம் உண்டா?
ஹிட்லரிடம் கேட்டார்கள், யூதர் மட்டும்தான் ஒழிக்கபட வேண்டுமா? வேறு ஏதும் திட்டம் உண்டா?
யூதருக்கு அடுத்து ஆபத்தானவர்கள் கம்யூனிஸ்டுகள் அவர்களை உலகை விட்டே விரட்ட வேண்டும்
அதற்கு அடுத்து இந்த மார்டன் ஆர்ட் ஓவியர்கள், தன் பாலின உறவாளர்கள், கனவிலே வாழ்ந்து யாருக்குமே பயனற்ற எழுத்துக்களை எழுதி காகித கழுதைகளாக வாழும் இலக்கியவாதிகள் இவர்களை எல்லாம் ஒழித்துகட்ட வேண்டும்
தொழிலால் நாட்டுக்கு பலன் உண்டு, விஞ்ஞானம் உலகை வளர்க்கும், மொழி அவசியம்
ராணுவத்தால் பாதுகாப்பு உண்டு, சிந்திக்க சொல்லும் எழுத்தில் பலன் உண்டு, வரலாறை படிப்பது மாபெரும் கடமை
ஆனால் அந்தரத்தில் மிதந்து பகல் கனவில் காகிதத்தை நிரப்புவதில் சமூகத்துக்கு என்ன கிடைக்கும்? அது ஒரு மனகோளாறு.
புத்தக கண்காட்சி என்ற பெயரில் சில அரைகுறை இலக்கியவாதிகள் ஒருமாதிரி சிரித்து அழுது, புலம்பி மகிழ்ந்து குழம்பி என்னனவோ பேசிதிரிவதை கண்டால் ஹிட்லர் சொன்னது உண்மைதான் போலிருக்கின்றது